158
||– –
அப்பாத்துரையம் - 16
பேரரசுப் போட்டியின் வரலாற்றில் சாளுக்கிய - பல்லவப் போட்டிக் காலத்துக்கும், பல்லவ பாண்டியப் போட்டிக் காலத்துக்கும் இடைப்பட்டது நெல்வேலிப்போர். அத்துடன் அது சுந்தரமூர்த்தி நாயனார் கண்ணில் சைவரும் தமிழரும் ஆன இரு பேரரசர் -பாண்டிய பல்லவர் -சமணனும் வடுகனுமான சாளுக்கியப் பேரரசன் முதலாம் விக்கிரமாதித்தனை எதிர்த்துப் போராடிப் பெற்ற வெற்றியாகத் தோன்றியிருக்க வேண்டும். இம்முறையில் வேறெந்தப் போரையும்விட இந்தப் போர் ஒரு பாண்டியனையும் ஒரு பல்லவனையும் நாயன்மாராகப் பாடிய சுந்தரமூர்த்திக்கு முதல்தரத் தேசீயப் போராகவும், நின்ற சீர் நெடுமாறன் தமிழகத்துக்கு ஆற்றிய அரும் பெரும் செயலாகவும் தோற்றியிருத்தல் இயல்பே. நெல்வேலிப் போரைப் பற்றிச் செப்பேடுகள் மிகுதி விவரம் தரவில்லை. அதைக் குறித்த பாண்டியர் செப்பேடு வேள்விக் குடிச் செப்பேடு ஒன்றே. அது,
66
“வில்வேலிக் கடற்றானையை
நெல்வேலிச் செருவென்றும்”
என்ற இரு பாதியடியில் மற்றப் போர்களிடையே ஒரு போராக அதைக் கூறியுள்ளது. இதனால் நெல்வேலி என்பது திருநெல் வேலியே என்றும் நெல்வேலிப் போர் சேரருடன் ஆற்றிய ஒரு சிறுபோரே என்றும் பல ஆசிரியர்கள் கருதிப் போந்தனர். பாண்டியர் ஆதாரங்களை மட்டுமன்றிப் பல்லவர் சாளுக்கியர் முதலிய வெளியார் ஆதாரங்களையும் ஒப்பிட்டுக் கண்ட ஆராய்ச்சியாளர் சுந்தரமூர்த்தி நாயணாரின் கண்கொண்டு நோக்கி மெய்நிலை கண்டுள்ளனர்.
'நெல்வேலி' திருநெல்வேலியல்ல, தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள நெய்வேலியே என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அது புதுக்கோட்டையருகிலுள்ள நெய்வேலி யாகவும் இருத்தல் கூடும்.
இப்போரில் பாண்டியன் எதிரி, பாண்டியப் பேரரசின் எல்லையில் இருந்த பல்லவப் பேரரசனல்ல; அப்பேரரசின் எல்லை தாண்டி நிலவிய சாளுக்கியப் பேரரசன் முதலாம் விக்ரமாதித்தியனேயாவன்.