பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

பாழி வாய் அமர் கடந்தும்,

என்று பாழிப் போரைப் பற்றியும்,

கைந் நிலத்த களிறு உந்திச்

செந்நிலத்துச் செரு வென்றும்

ச்

161

என்று செந்நிலப்போரைப் பற்றியும் வேள்விக்குடிச் செப் பேடுகள் குறித்துள்ளன. இச் செப்பேடுகளில் நெல்வேலிப் பெரும் போரையும் இந்தப் போர்களையும் ஒரே பொது மொழியில் புகழ்வதே அதன் விளக்கமற்ற தன்மையை எடுத்துக் காட்டும். இப்போர்கள் எங்கே யாரை எதிர்த்து நடைபெற்றன என்பது குறிக்கப்படவில்லை. ஆனால், முன்பின் வரிகளிலே, எதிரிகளாகிய பரவரைப் பாழ்படுத்தியதும், குறுநாட்டவர் குலங் கெடுத்ததும் கூறப்படுகின்றன. அத்துடன் சேரநாட்டு வெற்றி சற்று விரிவாகக் கூறப்படுகிறது.

“பார் அளவும் தனிச் செங்கோல் கேரளனைப் பல முறையும்

உரிமைச் சுற்றமும் மாவும் யானையும்

புரிசை மாவதிப் புலியூர் அப்பகல்

நாழிகை யிறவாமல் கோழியுள் வென்றுகொண்டும்"

என்ற அடிகளால் கேரளனை வென்று அவன் குடியினரைச் சிறைப்படுத்தி,யானையும் குதிரையும் கைக்கொண்டான் என்றும் அத்துடன் ஒரு பகலிலேயே சோழநாட்டு உறையூரை வென்று கொண்டான் என்றும் அப்பட்டயம் தெரிவிக்கிறது.

பாழி, செந்நிலப் போர்கள் பல்லவனை பல்லவனை எதிர்த்த போர்களாய் இருக்கலாம் என்று சிலர் கருதியுள்ளனர். ஆனால், இப்பாண்டியன் எதிரிகளுள் இன்னும் பல்லவன் குறிக்கப்பட வில்லை. பல்லவ பாண்டியப் போட்டி அடுத்த ஆட்சியுடனேயே தொடங்குகிறது என்னலாம். எனவே பாழி, செந்நிலப் போர்கள் சேரனையோ, பரவர் முதலிய குடிமரபினரையோ எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களாகவே இருத்தல் கூடும். ஆயினும் மற்ற வெற்றிகளிலிருந்து அவை தனித்தே குறிக்கப்படுகின்றன. அதே சமயம் இப்பாண்டியன் வெற்றிகளுள் உறையூர் கூறப்படுவதால்