அப்பாத்துரையம் – 16
162 ||. செந்நிலப் போர் பல்லவனையோ, அவன் சார்பில் சோழனையோ எதிர்த்து வென்ற வெற்றியாய் இருத்தல் கூடும்.
பாழி என்பது குடகு நாட்டிலுள்ள சங்க காலத்துச் செருப் பாழியாகவே இருத்தல் கூடாததன்று. அடுத்த தலைமுறைப் பாண்டியர்கள் வரலாற்றில் அந்நாட்டுடன் பாண்டியர் முன்னைய போர்த் தொடர்பு குறிக்கப்படுகிறது. ‘உதய கிரிமத் தியத்து உறு சுடர்போலத்
தெற்றெனத் திசை நடுங்க மற்று அவன் வெளிப்பட்டு’
என்று வேள்விக்குடிச் செப்பேடு அவன் ஆட்சித் தொடக்கத்தை ஆரவாரமாகக் குறிக்கிறது. இது கவிதைப் புனைந்துரையாயினும், அதன் தொனியே அவன் பாண்டிய மரபுக்குப் பேரரசு நிலை அளித்தான் என்று குறிப்பதாகும்.
பெருவள நல்லூர்ப் போர் கி.பி.675
-
பெருவள நல்லூர் என்பது பண்டை உறையூர் அல்லது இன்றைய திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே, பத்துக் கல் தாலைவுக்கு உள்ளேயே இருந்த ஓர் ஊர். இங்கே நடந்த போரில் பல்லவன் முதலாம் பரமேசுரவர்மன் (670 685) சாளுக்கியன் முதலாம் விக்கிரமாதித்தனுடன் போர் செய்தார். இப்போர் நெல்வேலிப் போருக்குப் பின், அதே ஆண்டில் நடைபெற்றது. உண்மையில் அது நெல்வேலிப் போருக்கு முன்னாகவும் பின்னாகவும் நிகழ்ந்த சாளுக்கியப் படையெடுப்பின் கடைசிக் கட்டமேயாகும்.
முதலாம் பரமேசுவரவர்மன் பட்டத்துக்கு வந்த ஆண்டிலேயே சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையெடுப்புத் தொடங்கி விட்டது. தவிசேறிய புதிய அரசன்மீது விக்கிரமாதித்தன் கடல் போன்ற பெரும் படைகள் திடுமெனப் பாய்ந்து, தலைநகராகிய காஞ்சியையே கைப்பற்றிக் கொண்டன. கி.பி. 670 லிருந்து 674 வரை காஞ்சிநகரும் பல்லவப் பேரரசும் சாளுக்கியப் படைகளின் பேரழிவுக்கு ஆளாயின. இக்காலத்திய சாளுக்கியர் கோலாகலமான வெற்றிகளை அவர்களின் கட்வல், சோர, கேந்தூர்ப் பட்டயங்கள் பலபடத் தெரிவிக்கின்றன.
“அகழி சூழ்ந்த காஞ்சிமா நகருக்குள் விக்கிரமாதித்தன்