தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
163
சித்திர காந்தம் என்னும் தன் குதிரை மீதமர்ந்து புகுந்து, பல்லவ மன்னர் தன் திருவடிகளை முத்தமிடும்படி செய்தான். புகழ் மிக்க மாமல்லன் (நரசிம்ம வர்மன்) பெயரனான பரமேசுவர வர்மனைப் புறமுதுகிட்டோடச் செய்ததனால் அவன் ‘இராசமல்லன்' என்ற பட்டப்பெயர் புனைந்து கொண்டான்” என்று கட்வல் பட்டயம் புனைந்து கூறுகின்றது.
விக்கிரமாத்தித்தனுடைய திடீர்த்தாக்குதலைச் சமாளிக்க யலாது பல்லவப் படைகள் பின்னடைந்து சென்றிருந்தன என்பதிலும், தடுப்பவர் யாரும் இல்லாமல் விக்கிரமாதித்தன் பல்லவப் பேரரசின் எல்லை முழுதும் கடந்து அதன் தென் கோடிவரை சென்றிருக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில், அவன் படைகள் நிலையாக உரகபுரத்தையே தம் மூலதளமாக்கியிருந்தன என்று கேந்தூர்ப் பட்டயங்கள் கூறுகின்றன. உரகபுரம் என்று இங்கே கூறப்படுவது இன்று திருச்சிராப்பள்ளியின் பகுதியாக உள்ள பழைய உறையூர் மாநகரேயாகும். இதிலிருந்தே சாளுக்கியப் படைகள் பெருவள நல்லூர்ப் போர்க்களத்துக்கு முன்னேறியிருந்தனர் என்று உயர்த்துணரலாம்.
நெல்வேலிப் போருடன் சாளுக்கிய பல்லவப் போராட்டம் சாளுக்கிய தமிழகப் போராட்டமாயிற்று. ஆனால், அப்போர் முடிவில் அது மீண்டும் பல்லவ சாளுக்கியப் போராட்டமாகவே நடைபெற்றது. ஆனால், சாளுக்கிய பல்லவர் தொடர்பு தலைமாறிவிட்டது. இதுவரை பல்லவப் பட்டயங்கள் மௌனம் சாதித்தன. சாளுக்கியப் பட்டயங்கள் முழங்கின. ஆனால், இதன் பின் பல்லவப் பட்டயங்கள் முழங்கின; சாளுக்கியப் பட்டயங்கள் மௌனம் சாதித்தன; ஆயினும், 'தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்’ என்ற சாளுக்கியரின் கேந்தூர்ப் பட்டயக்கூற்று ஒன்றே போரின் திரும்பு கட்டத்தையும் அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டுகிறது. பாண்டியரின் சின்னமனூர்ச் செப்பேடும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடலும் இதற்கு உரை விளக்கம் தருகின்றன.
கூரம் பட்டயம், பெருவள நல்லூர்ப் போரைப் பிற்காலச்