பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

165

தழைத்த இந்தத் தமிழகத்தின் மறுமலர்ச்சி சோழப் பெரும் பேரரசில் கிட்டத்தட்ட மீட்டும் சங்ககால, சங்க காலத்துக்கு முற்பட்ட பெருமையை அடையும் வகையில் புது மலர்ச்சி எய்திற்று என்னல் வேண்டும்.

நெல்வேலியும் பெருவளநல்லூரும் தரும் படிப்பினைகள்

இவையே.

மருதூர், செங்கோடு, புதான்கோட்டுப் போர்கள்

அரிகேசரி மாறவர்மனுக்குப்பின் பாண்டிய அரியணை ஏறியவன் பாண்டியன் கோச்சடையன் இரணதீரன் என்பவன். அவன் கி.பி.670-லிருந்து 710-வரை ஆண்டதாகக் கணிக்கப்பட்டி ருக்கிறது. ஆனால், நெல்வேலிப்போர் அரிகேசரிக்கே உரியதாகத் தெரியவருவதாலும், அது 675-ல் நடைபெற்றது என்பது உறுதியாகத் தெரிவதாலும், கோச்சடையன் ஆட்சி அதன் பின்னரே தொடங்கியிருத்தல் என்னலாம்.

இவன் தென்னவானவன், செம்பியன், சோழன், மதுர கருநாடகன், கொங்கர் கோமான் முதலிய புகழ்ப் பெயர்கள் தாங்கினான். இவை அவன் வெற்றிகளையும், அவன் அரசியல் தொடர்புகளையும், ஆற்றல் எல்லையையும் காட்டுகின்றன.

வேள்விக்குடிச் செப்பேடுகள் இவ்வரசனைப் பற்றிக் குறிக்கும் முதற் செய்தி மருதூர், செங்கோடு, புதான் கோட்டுப் போர்களேயாகும்.

“பொருதுஊரும் கடல்தானையை மருதூரில் மாண்பு அழித்து”

என்ற அடிகள் மருதூர் வெற்றியைக் குறிக்கின்றன. ஆயினும், அது யாருக்கெதிரான வெற்றி என்பதை அது வெளிப்படத் தெளிவாகக் குறிக்கவில்லை, இதனால் ஆராய்ச்சியாளர் திரு. டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் இப்போரும் இதற்கடுத்துக் குறிக்கப்பட்ட மங்களாபுரம் போரும் இரண்டுமே சாளுக்கியருக்கெதிராகப் பாண்டியர் ஆற்றிய போர்களே என்று கொண்டுள்ளார். "மேலைச் சாளுக்கிய மன்னனாகிய முதல் விக்கிரமாதித்தனைத் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள