பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

அப்பாத்துரையம் - 16

மருதூரிலும் மங்களாபுரத்திலும் போரில் வென்று புறங்காட்டி ஓடச்செய்த புகழுடையவன் இவ்வேந்தன்" என்று அவர் குறிக்கிறார். மருதூரும் மங்களாபுரமும் இரண்டிடங்களும் நெல்வேலியையும் பெருவள நல்லூரையும் போலவே திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ளவை என்றும், இரண்டு போர்களுமே நெல்வேலி வெற்றியைத் தொடர்ந்து, ஆனால், பெருவள நல்லூருக்கு முன் நடைபெற்றன என்றும் அவர் கருதினராதல் வேண்டும். ஆனால், வேள்விக்குடிப் பட்டயத்தின் வாசகங் களை நோக்க, மருதூர், செங்கோடு, புதான்கோடு ஆகிய போர் களில் உள்ள எதிரிகள் வேறு, மங்களாபுரத்திலுள்ள எதிரிகள் வேறு என்றே எண்ண இடமேற்படுகிறது. அது போலவே, அவ்விருசார்ப் போர்களும் நெல்வேலியையடுத்தோ, ஒன்றையொன்றடுத்தோ நிகழ்ந்தன என்றும் கொள்ள

இடமில்லை.

மருதூர்ப்போர் ஆய்வேளை எதிர்த்து வெற்றி கண்ட போரே என்று கருதுவதே நேர்மையானது. ஏனெனில் மருதூர்ப்போரைப் பற்றியே மேலே காட்டிய அடிகளையடுத்து, அதன் தொடர்ச்சி யாகவே,

66

"ஆய்வேளை அகப்படவே என்னாமை எறிந்து அழித்து”

என்றும்,

“செங்கோட்டும் புதான்கோட்டும்

செருவென்று அவர் சினம் தவிர்த்து”

என்றும் ஆய்வேள் வெற்றியும் செங்கோட்டுப் புதான் கோட்டுப் போர்களும் குறிக்கப்பட்டுள்ளன. பிந்திய இரண்டு போர்களிலும் எதிரியாகச் சுட்டப்பட்ட ‘அவர்’ முன் கூறப்பட்ட ஆய்வேளே யாவன் என்பதில் ஐயமில்லை. ஆய்வேள் எறிந்து

அழிக்கப்பட்டதும் முன் போரிலேயே என்பதும் இதனால் தெளிவு படுகிறது.

மருதூர்ப் போரில் ஆய்வேளின் ஆட்சி ஆற்றல் அழிக்கப் பட்டாலும், அவன் அதில் பாண்டியன் கைப்படவில்லை. பணியவுமில்லை. அப்போரின் தோல்வியால் அவன்