பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

167

புண்ணேறுண்ட புலி போல் சீற்றங்கொண்டு மீண்டும் மீண்டும் பாய்ந்தெழுந்து வந்தான். செங்கோட்டிலும் புதான்கோட்டிலும் போரிட்டு முறியடிக்கப்பட்ட பின்னர், அவன் உயிரிழந்தோ அல்லது பணிந்தோ சினந்தணிந்தான். இதுவே செப்பேட்டு வாசகங்கள் நமக்குத் தரும் சித்திரம் ஆகும்.

ஆய்வேள் என்பவன் சங்கப்பாடல்களில் நாம் கேள்விப் படும் பொதிகை மலை ஆய்மரபில் வந்தவனே. சங்க கால ஆய்மரபினரின் தலைநகரம் ஆய்குடி. அது இன்றும் அப்பெயருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவுகின்றது. கோச்சடையன் காலத்திலும் அதுவே அவன் தலைநகராய் இருந்திருக்கக்கூடும். பின் நாட்களில் இம்மரபினர் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள நாங்குனேரி வட்டம் முழுவதும் அதன்பின் தென்திருவாங்கூர் முழுவதும் கைக்கொண்டு ஆண்டதுண்டு. அடிக்கடி அவர்கள் திருவாங்கூர் முழுவதும் பரவியதும் உண்டு. ஒரே ஒரு தடவை (14-ஆம் நூற்றாண்டில்) அம்மரபினர் தமிழக முழுவதும் வென்றதும் உண்டு. இன்றைய திருவாங்கூர் மன்னர் இவன் மரபினரேயாவர்.

சங்ககாலத்தில் ஆய்வேள் வலிமை வாய்ந்த சிற்றரசனாய் இருந்தான். கோச்சடையன் காலத்தில் அவன் இன்னும் வலிமை யுடையவனாக வளர்ந்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் அவனை வென்ற செய்தி பேரரசரை எதிர்த்துப் பெற்ற வெற்றி களுக்கு ஒப்பாக, அவற்றிலும் முனைப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆய்வேளும் பிறவேளிர்களும் சங்ககாலத்தைப் போலவே இடைக் காலத்திலும் பிற்காலத்திலும்கூட அரசரை வெல்லவும் அரசரைத் தாண்டிப் பேரரசராகவும் விதிர்விதிர்ப்புடைய வராகவே இருந்தனர் என்று காண்கிறோம். அவர்கள் தமிழக வரலாற்றில் ஆற்றியுள்ள துணுக்குறும் செய்திகள் இதற்குச் சான்று தரும்.

மருதூர், திருச்சிராப்பள்ளியருகிலுள்ள ஊர் என்று தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர் அது பாண்டி நாட்டிலேயே உள்ள திருப்புடை மருதூரே என்று கருதுகின்றனர். இது உண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அம்பாசமுத்திரம் என்று அழைக்கப்படும் நகரின் பழம்பெயரே என்றும் அறிகிறோம். அடுத்த பாண்டிய அரசர் காலங்களில்