பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(170 ||--

சாளுக்கியரே என்பதைக் காட்டும்.

அப்பாத்துரையம் - 16

‘மங்களாபுரத்தை ஆண்ட பேரரசன் தன் இறுதிப் படுக்கை யின்போது தன் பிள்ளைகளை அழைத்தான்.பாண்டியர் கையில் தான் அடைந்த அவமதிப்பை எண்ணி எண்ணி அவன் குமுறினான். அந்த அவமதிப்புக்குப் பழிவாங்கி அந்தக் கறையைக் கழுவாமல் இறப்பதுபற்றி அவன் மிகவும் வருந்தினான். அவன் பிள்ளைகள் அதனைத் தாம் கட்டாயம் செய்வதாக வாக்களித்தனர். அதன்படி நடந்த போரே மங்களாபுரம் போர். இது அவர்கள் கூற்று.

முன்பு, பாண்டியர் கையில் அவமதிப்படைந்த அரசன் சாளுக்கியனே தவிர வேறு எந்த வடபுல மன்னராகவும் இருக்க முடியாது.பாண்டியரை மங்களாபுரத்தில் எதிர்த்த அரசனும் விக்கிரமாதித்தனுக்குப் பின்வந்த சாளுக்கியப் பேரரசன் விசயாதித்தியனே.

மங்களாபுரம் வெற்றியால் மேல்கொங்கு என்று அந்நாள் அழைக்கப்பட்ட வடமலையாள தென் கன்னடக்கரை பாண்டியன் ஆட்சிக்குட்பட்டது. இச்செயலால் கோச்சடையன் தன் பின்னோருக்குப் பெரும் புகழும் பொறுப்பும், அத்துடன் பெருந்தொல்லையும் மரபுரிமையாக விட்டுச் சென்றான். ஏனெனில் சாளுக்கிய - பாண்டியப் போட்டி இப்போது நேரடிப் போட்டியாகவும் அணுக்க போட்டியாகவும் மாறிற்று.

சாளுக்கியரைப் பாண்டியரும் என்றும் முற்றிலும் வென்று அடக்கிவிட முடியவில்லை. பிற்காலத்திய சோழப் பெரும் பேரரசரும் கூடக் கீழைச் சாளுக்கியரை முற்றிலும் தமதாக்கியது போல மேலைச் சாளுக்கியரை ஆக்கிவிட முடியவில்லை. இரு பேரரசுகளில் ஏதேனும் ஒன்று து செய்திருந்தால் தென்னாட்டின் வடமேற்குப் பகுதி தென்னாட்டுக்கு இவ்வளவு அயல் நிலமாகவும், மேலை இந்தியா மாநிலத் தேசிய வாழ்வின் வ்வளவு பிற்பட்டும் இருக்கமாட்டா என்னலாம்.

இந்தியாவின் நாகரிகம் என்பது, தமிழர் தொட்ட இடத்துப் பண்பாடு என்பதும், இந்தியாவில் பிற்போக்கு என்பது, தமிழர் விட்ட இடத்துக்குறை என்பதும் இதனால் விளங்கும். தமிழின உரிமையற்ற இந்திய அரசியலும், தமிழ்த் தொடர்பற்ற இந்தியத்