பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

171

தேசியமோ வரலாறோ காண்பவரும் கவனிக்க வேண்டிய செய்தி

இது.

பாண்டிய பல்லவப் போட்டி: நந்திபுர முற்றுகை;

நெடுவயல், குறுமடை, மன்னிக்குறிச்சி, பூவலூர், கொடும்பாளூர், குழும்பூர், சங்கர மங்கை, மண்ணைக்குறிச்சி, பெண்ணாகடம்; மண்ணை நென்மிலி, கரூர், சூதவனம், நிம்பவனம், குரும்பூர், சூரவழுந்தூர்.

பாண்டியன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் என்ற முதலாம் இராசசிம்மன் (710-775) ஆட்சியும், பல்லவன் ரண்டாம் நந்திவர்மன் பல்லவ மல்லன் (710 - 775) ஆட்சியும் பேரளவில் சமகால ஆட்சியாய் அமைகின்றன. அவர்கள் காலத்திலேயே பாண்டிய பல்லவப் போட்டி உச்சநிலையை அடைந்தது என்னலாம்.

பல்லவன் முதலாம் பரமேசுரவர்மனுக்குப் பின் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராசசிம்மன் (685 - 705) இரண்டாம் பரமேசுரவர்மன் (705 - 710) ஆகியோர் ஆண்டனர். இவ்வரசர் களுடன் முதலாம் மகேந்திரவர்மனின் தந்தையாகிய சிம்ம விஷ்ணுவின் நேர் மரபு தொடர்பற்றுப் போய்விட்டது. அரசகுடிக்கு அண்மை மரபினருள் ஒருவனான சித்திரமாயனே உறவினரால் அரசுரிமைக் குடிவழித் தகுதியுடையவனாகக் கருதப்பட்டான். ஆனால், அவன் பல்லவப்பேரரசின் பெரும் பொறுப்பை

-

பாண்டிய சாளுக்கியப் போட்டிகளின் நெருக்கடியை -ஏற்றுச் சமாளிக்கத்தக்க ஆற்றலற்றவன் என்று நாட்டின் பொறுப்புடைய பெருமக்கள் எண்ணினர். அவர்கள் சிம்மவிஷ்ணுவின் உடன் பிறந்தனான பீமவர்மன் வழிவந்த

ரணியவர்மனை அரசனாகும்படி வேண்டினர். இரணிய வர்மன் முதியவனாதலால் தன் மைந்தரைக் கேட்க, அவர்களுள் மூத்தவர்கள் அப் பொறுப்பேற்க அஞ்சினர். கடைசி இளைஞனான நந்திவர்மனே பொறுப்பேற்று இரண்டாம் நந்திவர்மன் ஆனான்.

சித்திரமாயனை ஆதரித்தவரை நந்திவர்மன் ஆதரவாளர்