172
அப்பாத்துரையம் - 16
எளிதில் முறியடித்துத் துரத்தினர். சித்திரமாயன் பல்லவர் எதிரியான பாண்டியன் அரிகேசரி பராங்குசனிடம் சென்று தஞ்சம் அடைந்தான். இதை அறிந்தே உள்ளூர்ப் பாண்டியப் பேரரசின் மேலாட்சியை விரும்பாத பாண்டி நாட்டு வேளிரான தகடூர் அதிகமான், கங்க அரசன் பெரும்பிடுகு முத்தரசன் ஆகிய இருவரும் பல்லவன் நந்திவர்மனை ஆதரித்தனர். சேரரும் சோழரும் இப்போரில் பாண்டியன் பக்கமே இருந்தனர் என்று தோற்றுகிறது.ஏனெனில் பல்லவப் பட்டயங்கள் பல்லவனைத் தென்தமிழரசர் அனைவரும் சேர்ந்து எதிர்த்தனர் என்று கூறுகிறது.
பாண்டிய பல்லவப் பெரும்போர் என்று குறிக்கத்தகும் இப்போராட்டத்தில் முதற் பகுதி நந்திபுர முற்றுகையேயாகும். நந்திபுரம் என்பது கும்பகோணத்தருகிலுள்ள ஒரு பழய நகரம். அது இன்று நாதன்கோவில் என்ற பெயருடையது.இப்பல்லவன் காலத்திலேயே வாழ்ந்து அவனையும் பாடியுள்ள திருமங்கை யாழ்வார் அதிலுள்ள கோயிலை நந்திபுர விண்ணகரம் என்று குறித்தார். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அது பல்லவப் பேரரசின் துணைத்தலைநகராகவும் தென்மாகாணத் தலைமையிடமாகவும் இருந்தது. திருமால் ஆர்வலனான பல்லவன் இங்கே அடிக்கடி தங்கி அங்குள்ள திருமால் கோயிலில் சென்று வணங்குவது வழக்கம். கி.பி. 734-ல் அவன் இவ்வாறு தங்கியிருக்கும் சமயம் பாண்டியன் தலைமையில் தென்தமிழரசர் அதனை முற்றுகையிட்டனர். பல்லவரப் பேரரசன் கிட்டத்தட்டச்
சிறைப்பட்டவனானான்.
பல்லவன் படைத்தலைவனான உதயசந்திரன் தமிழகத்தின் தளபதிகளுள் தலைசிறந்தவன். அவன் வேகவதியாற்றின் கரை யிலுள்ள வில்வல நகர்க் கோமான் என்று குறிக்கப்படுகிறான். அவன் ஒப்பற்ற வீரன் மட்டுமல்ல, தலைவனிடம் அசையாத உறுதியும், ஈடுபாடும், தன்மறுப்பும் உடையவன். பேரரசன் நிலை உணர்ந்ததும் அவன் உடனே துடிதுடித்தெழுந்தான். சூறாவளி போலச் சுழன்று எதிரிகள்மீது போர் முரசு முழக்கினான்.
நெடுவயல் முதலாகச் சூரவழுந்தூர் ஈறாக மேலே குறிப் பிட்ட போர்கள் அத்தனையும் பாண்டியப் பேரரசரின் தலைமை யிலுள்ள தென் தமிழகப் படைகளுக்கும் உதயசந்திரன் தலைமை