பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

||--

அப்பாத்துரையம் - 16

பேரளவில் கைப்பற்றப்பட்டன என்று அறிகிறோம்.

கொடும்புரிசை நெடுங்கிடங்கில்

கொடும்பாளூர்க் கூடார்

கடும்பரியும் கருங்களிறும்

கதிர்வேலில் கைக்கொண்டும்

குழும்பூர் வெற்றியே பாண்டியர் கடைசிப் பெருவெற்றி ஆகும். அதிலும் யானை குதிரைகள் கைப்பற்றப்பட்டன. போரில் எதிரி பல்லவன் என்பது இப்போர் பற்றிய செய்தியிலேயே தெளிவாகக் குறிக்கப்படுகிறது.

செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூரில் தேசுஅழிய எண் இறந்த மால்களிறும் இவுளிகளும் பல கவர்ந்தும்

சங்கரமங்கைப் போர் வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்பட வில்லை, ஆனால், சின்னமனூர்ச் செப்பேட்டில் நெல்வேலி சங்கரமங்கை என்ற இரண்டு போர்கள் இம்மன்னன் பெயரால் குறிக்கப்படுகின்றன. உதயேந்திரனின் பல்லவ ஆதாரங்களும் ஒரு நெல்வேலி பற்றிக் குறிக்கின்றன. அது இந்த நென்மிலியா அல்லது நெல்வேலிதானா என்று தெரியவில்லை. நெல்வேலி யிலேயே இரண்டு போர்களும் நடந்தன என்றால், இந்த நெல்வேலிப் போரை நாம் இரண்டாம் நெல்வேலிப் போர் என்று குறிக்க வேண்டும்.

“வில்லவனை நெல்வேலியினும் விரிபொழில் சங்கரமங்கைப்

பல்லவனைப் புறங்கண்ட

பராங்குசன் பஞ்சவர் தொன்றலும்’

ப்

என்ற சின்னமனூர் வாசகம் சங்கரமங்கைப் போர் பாண்டியன் வெற்றி என்று தெளிவாகக் குறிக்கிறது. ஆயினும் பல்லவரும் இதைத் தமது வெற்றியாகக் கூறுவதால், இது வெற்றி தோல்வி உறுதியற்ற சரிசமப் போராய் இருந்திருத்தல் கூடும். மண்ணைக் குறிச்சியில் பல்லவனும், பெண்ணாகட