பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(176)

|– –

பாண்டியர் மழகொங்க வெற்றி:

பெரியலூர், புகலியூர்ப் போர்கள்

அப்பாத்துரையம் – 16

வேள்விக்குடிச் செப்பேடு பெரியலூர்ப் போரின் வெற்றியை யும் மழகொங்க வெற்றியையும் தனித்தனியாகவே, ஆனால், பெரியலூர் வெற்றியே மழகொங்க நாட்டு வெற்றிக்குரிய போர்கள் வெற்றியாயிருந்த தென்னலாம்.

“தரியலராய்த் தனித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்;

பூவியும் பொழிற்சோலைக்

காவிரியைக் கடந்திட்டு,

அழகமைந்த வார்சிலையின்

மழகொங்கம் அடிப்படுத்தும்”

மழகொங்கர் தலைவன் மகளாகிய பூசுந்தரியைப் பாண்டியன் பராங்குசன் மணம்புரிந்து கொண்டான். அவள் வயிற்றில் பிறந்த புதல்வனே அடுத்த பாண்டியர் பேரரசனான நெடுஞ்சடையன் பராந்தகன் ஆவான். இங்கிலாந்தின் மன்னர் 13-ஆம் நூற்றாண்டில் வேல்ஸ் நாட்டை வென்ற பின், தன் மைந்தனை வேல்ஸ் நாட்டுக் கோமானாக முடி சூட்டியதுபோலப் பாண்டியனும் இந்த இளவரசன் நெடுஞ்சடையனுக்கு வயது வந்தவுடன் ‘கொங்கர் கோன்' என்ற உரிமையுடன் அவனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டினான்.

சாளுக்கிய பல்லவப் போராட்டம்

பல்லவர் தென்திசைப் போரில் ஈடுபட்டிருந்த சமயம் முதலாம் விக்கிரமாதித்தனுடைய இரண்டாம் புதல்வனும் வினயாதித்தனுக்குப் பின் சாளுக்கியப் பேரரசனானவனுமான இரண்டாம் விக்கிரமாதித்தன் (733-746) பல்லவப் பேரரசின் மீது படையெடுத்துக் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படையெடுப்பில் இரண்டாம் விக்கிரமாதித்தன் மகன் கீர்த்திவர்மனுமே அவனுடன் கலந்து கொண்டிருந்தான்.

காஞ்சி சாளுக்கியர் கையிலிருந்த காலம் சிறிதேயானாலும் அவர்கள் வெற்றி நிறை வெற்றியாகவே இருந்ததென்று தெரிகிறது. போரில் இதுவரை தென்னாட்டு மன்னர்