பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

177

கையாண்டிராத ஒரு வள்ளுவர் பண்பைச் சாளுக்கியப் பேரரசன் கையாண்டு பல்லவப் பேரரசரை நாணவைத்தான். அவன் நகரில் அழிவு செய்யவில்லை; மக்களைத் துன்புறுத்தவில்லை. அது மட்டுமன்று, அவன் தந்தை முதலாம் விக்கிரமாதித்தன் காஞ்சி கைலாசநாதர் கோயிலிலிருந்து கொள்ளையிட்டுச் சென்ற பொற்காசுகளையும் அணிமணிகளையும் அக்கோயிலுக்கே திருப்பிக்கொடுத்தான். இவையன்றி மேலும் பல நன்கொடைகள் அளித்தான். காஞ்சியைக் கைக்கொண்டிருந்த சில நாட்களில் நகர, நாட்டு மக்கள் உள்ளத்தையே அவன் கவர்ந்துகொண்டான் என்று அறிகிறோம்.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”

என்ற நீதிப்படி தான் செய்த செயலையும் வாதாபியில் பல்லவர் செய்த செயலுடன் ஒப்பிட்டுக் காட்டி அவன் கைலாசநாதர் கோயில் தூண் ஒன்றில் ஒரு கல்வெட்டுப் பொறிப்பித்தான்.

விசித்திரமான இவ்‘வள்ளுவத் தண்டனை'க்கு எதிர் செயல் வகை தெரியாமல் பல்லவர் விழித்திருக்க வேண்டும்!

பல்லவனைத் தென் தமிழக அரசரிடமிருந்து மீட்ட பின் உதயசந்திரன் வடக்கே திரும்பிச் சாளுக்கியரைத் தம் நாட்டுக்குத் துரத்திப் பல்லவப் பேரரசை மீண்டும் நிலைநிறுத்தினான்.

கடைசிச் சாளுக்கிய - பாண்டியப் போராட்டம்: வெண்மைப் போர் கி.பி. 740 741

-

மழகொங்க வெற்றியும் அதிகன் வெற்றியும் முடிவுற்ற பின்னர் பாண்டியன் தன் கைவரிசையை இன்னும் வடக்கே செலுத்தினான். தற்கால மைசூரின் பெரும்பகுதியே அன்று கங்க நாடு என்றழைக்கப்பட்டிருந்தது. பல்லவ - பாண்டியப் போரில் கங்கர் பல்லவனுக்கு உதவியாயிருந்ததே இப்படையெடுப்புக்குரிய ஒரு காரணம் ஆகும். படையெடுப்பின்போது கங்க அரசன் சிரீபுருஷ முத்தரசன் என்பவன்; அவன் சில சமயம் சாளுக்கியருக் கும் சில சமயம் பல்லவருக்கும் உதவினாலும், சாளுக்கியப் பேரரசன் இரண்டாம் விக்கிரமாதித்தனையே மேலாட்சியாள னாகக் கொண்டிருந்தான். ஆகவே அவனை எதிர்த்தபோது