தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
181
பெரும் படையுடன் பாண்டியப் பேரரசை உதிர்க்க முனைந்தான். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள புகழியூரிலும், காவிரி வடகரையிலுள்ள ஆயிரவேலி, அயிரூர் என்ற இடங்களிலும் பெரும் போர்கள் நிகழ்ந்தன.
மாஇரும் பெரும்புனல்
காவிரி வடகரை
ஆயிர வேலி
ஆயிரூர் தன்னிலும், புகழியூரிலும்
திகழ்வேல் அதியனை
ஓடுபுறம் கண்டு, அவன் ஒலியுடை மணித்தேர் ஆடல் வெம்மா
அவை உடன்கவர்ந்தும்
என்ற சீவரமங்கலச் செப்பேடு இப்போரை விளக்கமாக விரித் துரைக்கிறது. போரில் தோற்ற அதிகன் யானைகளும், குதிரைகளும் கைப்பற்றப்பட்டன. இப்போர்களில் பல்லவனும் கேரளனும் உதவியதும், இரு படைகளும் தோற்றோடியதும், வருணிக்கப் பட்டுள்ளன.
பல்லவனும் கேரளனும் ஆங்கவற்குப் பாங்காகிப்
பல்படையொடு பார்ஞெளியப்
பௌவமெனப் பரந்தெழுந்து
குடபாலும் குணபாலும்
அணுகவந்து விட்டிருப்ப,
வெல்படையொடு மேற்சென்று, அங்கு
இருவரையும் இருபாலும்
இடரெய்தப் படைவிடுத்து.
தமிழக அரசர் யாவரும் ஈடுபட்டுப் பாண்டியனை எதிர்த்த இப்போர் ஒரு சிற்றரசனை எதிர்த்த சிறு போர் அன்று; தமிழகப் பேரரசுப் போட்டியின் ஓர் உயிர்ப்பகுதியேயாகும். இப் போராட்டம் வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்படாததால்,