தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
183
என்று சீவரமங்கலச் செப்பேடு இவ்வெற்றிகளைக்குறித்துள்ளது.
காட்டுக்குறும்பு சென்றடைய
நாட்டுக்குறும்பில் செருவென்றும்
என்று வேள்விக்குடிச் செப்பேடு நாட்டுக் குறும்பை மட்டும் குறிக்கிறது. நான்கு களங்களிலும் முதல் களம் அதுவே என்பதை அதுகாட்டும்.
விழிஞப் போர் I
நெடுஞ்சடையன் வெற்றிகளில் ஆய்வேளை அடக்கியது தனிச்சிறப்புப்படக் குறிக்கப்படுகிறது.
ஆய்வேளையும் குறும்பரையும் அடல் அமருள் அழித்தோட்டி
என்று வேள்விக்குடிச் செப்பேடு இதைக் குறிக்கிறது. ஆனால், இந்நிகழ்ச்சியை விரிவுபடக் குறிப்பது சீவரமங்கலத்துச் செப்பேடே. அதன் வாசகங்களால் ஆய்வேள் அப்போது வேண்மன்னானயிருந்தானென்றும், முழுவதும் ஒருவேளை திருவாங்கூர் முழுவதும் ஆண்டிருக்கக் கூடுமென்றும், எப்படியும் திருவனந்தபுரம்வரை அவன் ஆட்சி பரவியிருந்ததென்றும் அறிகிறோம். ஏனென்றால் அவனைத் தாக்கிய போர் திருவனந்தபுரத்துக்குச் சற்றே தெற்கிலுள்ள விழிஞத்திலேயே நடைபெற்றது. அதுஉயர்பெரும் மதில்களுடன் இராவணன் இலங்கை போன்ற அரணங்களுடையதாயிருந்ததென்று செப்பேடு குறிக்கிறது.
ஆழிமுந்நீர் அகழ்ஆக
அகல் வானத் தகடு உரிஞ்சும் பாழிநீள் மதில் பரந்தோங்கிப்
பகலவனும் அகல ஓடும் அணியிலங்கையின்
அரணி தாகிய
மணியிலங்கு நெடுமாட
மதில் விழிஞம் அது அழியக்