பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

கொற்ற வேலை உறை நீக்கி

வேற்றத்தாயை வேண் மன்னனை வென்று அவன் தன் விழுநிதியொடு குன்றம் அன்ன கொலைக்களிறும் கூந்தல் மாவும் குலதனமும்

நன்னாடும் அவைகொண்டும்

அப்பாத்துரையம் - 16

என, ஆய்வேள் யானை குதிரை செல்வங்கள் கைப்பற்றி அவன் நாடும் கைக்கொண்ட செய்தி தெரிய வருகிறது.

வேணாடு என்ற திருவெங்கூரில் ஆய்வேளையல்லாத வேறு குடி மன்னரும் இருந்தனர். மலைநாட்டுக் கருகந்தன் இவர்களில் ஒருவனாய் இருத்தல் வேண்டும். நெடுஞ்சடையன் ஏறத்தாழ கி.பி. 788-ல் அவனை வென்று, அருவியூர்க் கோட்டை, கரைக் கோட்டை என்ற அவனுடைய அரண்காப்புடைய நடிகர்கள் இரண்டை அழித்தான்.

நெடுஞ்சடையன் ஆட்சி இறுதியில் பாண்டியநாடு, கன்னியாகுமரி முதல் தென்கன்னட மாவட்டம் வரையுள்ள கொங்குநாடு, மைசூர், சேர நாட்டுப் பகுதி ஆகியவை பாண்டியப் பேரரசின் எல்லைக்கு உட்பட்டிருந்தன.

திருநெல்வேலி, விழிஞம் II, கோட்டாறு, சேவூர், பூலந்தை நாரையாறு, கடையல் போர்க்களங்கள்

நெடுஞ்சடையனுக்குப் பின் பாண்டியன் இரண்டாம் ராசசிங்கன் (780 - 800), முதலாம் வரகுணன் அல்லது வரகுண மகாராசன் (800 -830) ஆகியோர் ஆண்டனர். ‘கொற்றவர்கள் தொழுக சோழற்கால் வரகுணமகாராசன்' என்று மட்டுமே சின்னமனூர்ச் செப்பேடுகள் இவனைக் குறிக்கின்றன. இவனே இறையனார் அகப்பொருளுரை மேற்கோளில் காட்டிய பாண்டிக் கோவையின் தலைவன் என்ற கருத்துடன், இத்தலைவனுக் குரியதாகக் குறிக்கப்பட்ட இப்போர்கள் இந்த வரகுணன் போரில் ஏற்பட்டுள்ளன.ஆயினும் மறைமலையடிகள் குறித்தபடி, இப் பாண்டிக்கோவைத் தலைவன் இரண்டாவது அல்லது மூன்றாவது இடைக்காலப் பாண்டியன் அவனி சூளாமணியாக இருக்கவேண்டும் என்பதே பொருத்தமானது.