192
பாண்டிய
அப்பாத்துரையம் - 16
வைத்திருந்தாலும், பல்லவர்களும் இலங்கைவெற்றி பற்றிக் கனவு கண்டிருந்தாலும், பாண்டியரே இடைக்காலத்தில் தமிழகத்தின் தனிக் கடற்பேரரசராயினர். இவ்வகையிலும் இ டைக் காலப் அரசு நெடியோன் காலக் கடல் ஆட்சியின் மறுமலர்ச்சியாகவும் கரிகாலன் கடல்வெற்றியின் மறுபதிப் பாகவும் அமைந்ததுடன், பின்னாளைய பெரும் பேரரசான சோழ மரபுக்கு வழி காட்டியாகவும் தூண்டுதலாகவும் மிளிர்ந்தது.
தொல்பழங் காலத்தையும் சோழப் பெரும் பேரரசுக் காலத்தையும் போலவே, இக்காலத்திலும் தமிழகப் பேரரசு ஒன்றே கடலகப் பேரரசாக விளங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விழிஞப் போர் II
வேணாட்டில் ஏதேனும் ஒரு கிளர்ச்சியை ஒட்டி இப்போர் நிகழ்ந்திருக்கலாம். விழிஞம் திருவனந்தபுரத்துக்குப் பத்துக்கல் தெற்கிலுள்ள மேல் கடற்கரைத் துறைமுக நகரம் என்பது முன்பே குறிக்கப்பட்டது.
தேங்கமழ்பொழில் குன்னூரிலும், சிங்களத்தும், விழிஞத்தும் வாடாத வாகை சூடிக்
கோடாத செங்கோல் நடக்க
என்ற சின்னமனூர்ப் பட்டய வாசகங்கள் விழிஞப் போருடன் குன்னூர் சிங்களப்போர்களையும் எடுத்துரைக்கின்றன. முன்பே நாடிழந்திருந்த வேணாடாண்ட சேர அரசன் இலங்கைப் போர் நிகழ்ச்சியின் போது கிளர்ச்சி செய்தோ, நேரடியாக இலங்கை அரசனுடன் தொடர்புகொண்டோ இருந்திருக்கலாம். இதுவே இலங்கைப் போரையடுத்துச் சேரநாட்டிலும் ஒரு விழிஞப் போரைத் தூண்டியிருக்கக் கூடும் என்னலாம்.
குடமூக்குப் போர் கி.பி. 854
உ
முன் எந்தப் பேரரசுக்கும் இல்லாத உச்சதளத்துக்கு ஈழ வெற்றி பாண்டியன் புகழை உயர்த்தியிருக்க வேண்டும் களப்பிரர் எழுச்சியின் பயனாகத் தன்னிலையும் தன்னுணர்வும் கெட்டிருந்த