தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
195
இலங்கையில் பாண்டியர் ஆட்சி சில நாட்களுக்குள் அழிந்தது. இலங்கையைக் கைப்பற்றியாண்ட புதிய அரசன் இரண்டாம் சேனன் பாண்டியர் மீது பழிவாங்கும் எண்ணத் துடன் மாயப் பாண்டியனை மீண்டும் கண்டுபிடித்து ஆதரித்தான். அவனுடன் பல்லவன் நிருபதுங்கனையடுத்து, அவன் உதவியால் பாண்டியர் எதிரிகளை மீண்டும் திரட்டினான். இங்ஙனம் பழிவாங்கும் போரை இலங்கையிலோ இலங்கையின் திசை யிலோ நடத்தாமல், பல்லவப் பெருஞ் சேனையுடன் தன் சிங்களப் படைகளையும் சேர்த்து வடக்கிலிருந்து பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான்.
கி.பி.862ல் நடைபெற்ற இப்போரில் பல்லவரும் சிங்களரும் பெரு வெற்றி கண்டனர்.பாண்டியப் பேரரசு தற்காப்பில் நின்று தன்னைக் காத்துத் தன் மாநிலங் கடந்த புகழை மின்னலென மறையவிடவே நேர்ந்தது. அடுத்த பாண்டியன் ஆட்சி இதே ஆண்டில் தொடங்குவதால், சிரீமாறன், போரிலோ அல்லது போரின் பின் ஏற்பட்ட மன இடிவிலோ மாண்டிருக்கக்கூடும்
என்னலாம்.
பாண்டியப் பேரரசின் வளர்ச்சிக்கு இப்போர் பேரிடி யானாலும், இப்போர் அப்போரை சிதறடித்து விடவில்லை. அதன் வளர்ச்சியை முற்றிலும் தடுத்துவிடவும் இல்லை. சீர்மாறன் புதல்வர் இருவர் ஆட்சிகளும் இதனைக் காட்டுகின்றன.
-
பாண்டிய பல்லவப் போட்டி -
கி.பி. 862 880: கடைசிக் கட்டம்:
-
இடவைப் போர் கி.பி. 862
சீர்மாற சிரீவல்லபனுக்குப் பின் அவன் புதல்வர் இரண்டாம் வரகுணன் என்ற வரகுணவர்மன் (862 -800), பராந்தகன் வீர நாராயணன் (880 - 900) ஆகிய இரு புதல்வர்களும் அவர்களை அடுத்துப் பராந்தகன் புதல்வனான மூன்றாம் இராசசிம்மனும் (900 - 910) ஆண்டனர்.
இடவைப் போர் பாண்டியர் வெற்றிகளும் ஒன்று ஆயினும், பாண்டியர் செப்பேடுகள் எதுவும் அது பற்றிக் குறிக்க வில்லை. கல்வெட்டுகளின் சான்றுகொண்டே அதைத் துணிய