196
அப்பாத்துரையம் - 16
வேண்டியதாயுள்ளது. ஆனால், அது எந்த அரசனுக்குரியது என்பது பற்றி வரலாற்றாசிரியர்களுக்கிடையே பெருவேற்றுமைக் காணப்படுகிறது. அதை முதலாம் வரகுணன் என்ற வரகுண மகராசனுக்கு உரிமைப்படுத்துபவர்களும் பராந்தகன் வீர நாராயணனுக்கு உரிமைப்படுத்துபவரும் உண்டு. இது பாண்டியப் பேரரசின் சோழநாட்டு வெற்றி குறிப்பதனாலும், முதலாம் வரகுணவர்மன் அரசூர்ப்படை வீட்டிலிருந்து கொண்டே திருப்புடை முருதூர் என்ற அம்பாசமுத்திரத்திலுள்ள கோயிலுக்குக் கொடை வழங்கியதாகத் தெரிவதனாலும், முதலாம் வரகுணன் ஆட்சியுடனேயே இது பெரிதும் இசைவது ஆகும். ஆயினும் கல்வெட்டாராய்ச்சியாளர் தரும் ஆண்டுக் கணிப்பையொட்டியே இதனை இரண்டாம் வரகுண
வர்மனுக்குரியதாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு
வை என்பது சோழ மண்டலத்தில் இராசேந்திரசிங்க வளநாட்டு மண்ணி நாட்டில் இன்றைய கும்பகோணத்துக்கு அருகாமையில் இருந்ததெனத் திரு பண்டாரத்தார், கல் வெட்டுக்கள் மூலம் சுட்டிக் காட்டுகிறார். புலவர் திரு. வை. சுந்தரேசவாண்டையார் (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 22, பரல் 5 பக்கம் 140 −1) திருப்பனந்தாள் கல்வெட்டுக்களின் உதவியால் அது வடகரை மண்ணி நாடு என்ற பகுதியில் இடவை வாய்க்கால் என்ற வாய்க் காலை அடுத்துள்ள ஒரு ஊர் என்றும் 1447 வரை அவர்வூர் இருந்ததாகக் கல்வெட்டுக்களால் தெரிவதாகவும் அறிவிக்கிறார். ஆனால், ஆதித்த சோழனுடன் போரிட் பாண்டியன் பின்னடைந்து ஓடிய காரணத்தாலேயே அது இடவை என்று பெயர் பெற்றதென்று குறிக்கிறார். ஆனால்,, 'இந்நாட்டு இடவையாகிய, பாண்டியனை வெந்கண்ட சோழ சருப்பேதி மங்கலத்து' என்ற கல்வெட்டுச் சான்றே இடவை என்பது வெந்கண்டதற்கு முன்னுள்ள பெயர் என்பதைக் காட்டும். இடவையிலுள்ள அந்தப் போரை நோக்க, பாண்டியன் வென்ற இந்த இடவைப்போர் முதல் இடவைப்போர் ஆகும் என்னலாம். குரைகழற்கால் அரசு இறைஞ்சக் குவலயம தன தாக்கின