தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
வரைபுரையும் மணி நெடுந்தோள்
மன்னர் கோன் வரகுணவர்மன்
197
என்று சின்னமனூர்ச் செப்பேடு இரண்டாம் வரகுணனைப் புகழ் கிறது. ஆனால், அவன் செயலாக வேறு எதுவும் கூறப்படவில்லை.
திண்டுக்கல் பகுதியிலுள்ள ஒரு கல்வெட்டின் மூலம் இப் பாண்டியன் சோணாட்டின் மீது படையெடுத்து, தென்பெண்ணை யாற்றின் கரையிலுள்ள அரசூரில் தளமிட்டுத் தங்கியிருந்ததாக அறிகிறோம். சோழன் இப்போரில் தோல்வியுற்றான்.அத்துடன் இப்பாண்டியன் வேம்பில் என்ற இடத்திலுள்ள கோட்டையை அழித்தான் என்றும் அறிகிறோம். வெம்பில் என்பது தற்கால வேம்பற்றூர் ஆகும். அதுவே சங்ககால விசலூர் அல்லது வியலூர் என்றும் சிலர் கொள்கின்றனர். ஏனெனில் அதுவும் திருவிசலூர் என்றே அழைக்கப்பட்டது.
பராந்தகப் பள்ளிவேலன் என்ற நாகமபுல்லன் இடவைப் போரில் பாண்டியனுடன் போர் செய்திருந்தான். இப்போர் பராந்தக நாராயணன் போர் என்று கருதுவதற்கு இப்பெயர் இடம் கொடுத்திருத்தல் வேண்டும்.
திருப்புறம்பியம் போர் 880
திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர். இங்குக் கி.பி. 880-ல் நடைப்பெற்ற பெரும் போர் தென்னாட்டு வரலாற்றிலேயே பெரு முக்கியத்துவம் உடைய ஒரு போராக எல்லா வரலாற்றாசிரியர்களாலும் கொள்ளப்படுகிறது. உண்மையில் அது பாண்டியருக்கும் பல்லவருக்கும் இடையே இருநூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த தமிழக முதன்மைப் போட்டியாகிய சதுரங்கத்தின் இறுதியாட்டம் ஆகும். இது மட்டு மல்ல அது அவ்வாட்டத்தில் எதிர்பாராத திரும்பு கட்டமும் ஆகும். போட்டியில் இரு பேரரசுகளும் இரண்டு பெரிய மதயானைகள் போல் சண்டையிட்டுத் தளர்வுற்றன. அச்சமயம் சங்ககாலத்திலிருந்து ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்குமேல் பேரரசார்வத்தைக் கருவில்வைத்து வளர்த்த சோழர் புலிபோலச் சீறி எழுந்து தமிழக அரசியல் களத்தை விரைவில் தமதாக்கிக்