198
அப்பாத்துரையம் - 16
கொண்டனர். அது மட்டுமன்று, நிலத்தில் தமிழகம் கடந்து நெடுந்தொலை செல்லாமலும், கடலகத்தில் இலங்கை கடந்து கனவுகாண முடியாமலும் இருந்த பாண்டியர் போலன்றி, அவர்கள் கரிகாலன் செயலையும் நெடியோன் செயலையும் வரலாற்றுக் காலத்திலேயே மெய்யாக்கி, தென்னாடெங்கும் பரந்து சிந்து கங்கை வெளியிலும் இலங்கையிலும் தென் கிழக்காசியாவிலும் மீண்டும் தமிழகக் கொடியைப் பறக்கவிடத் தொடங்கினர்.
திருப்புறம்பியப் போர் நிகழ்ச்சியின்போது பல்லவப் பேரரசனாயிருந்தவன் நிருபதுங்கவர்மன் (850-882). அவனுடன் அவன் புதல்வன் அபராஜிதனும் ஆட்சியில் பங்குகொண்டிருந் தான். பல்லவன் நெருங்கிய உறவினனாய் இருந்த கங்க அரசன் முதலாம் பிருதிவீபதியும், வளர்ந்துவரும் சிற்றரசுத் தலைவனான சோழன் ஆதித்தனும் பல்லவர் பக்கம் நின்று போரிட்டனர். பாண்டியன் இரண்டாம் வரகுணன் இப்போரில் ஒப்பற்ற வீரம் காட்டினான். ஆனால், கங்கன் பிருதிவீபதி கண்டவர் வியக்கும் வண்ணம் பாண்டியர் படைகளைக் கொன்று குவித்தான். சீற்றம் கொண்ட பாண்டியன் அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால், மாள்வதற்கு முன்பே அவன் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்துக்கே வெற்றியளித்துவிட்டான். கங்கரின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டிக் கூறுகிறது.
'தன் உயிர் விட்டும் அபராஜிதனை (பகைவரால் வெல்லப் படாதவன் என்ற அப்பெயரின் பொருளுக்கேற்றபடி) அபராஜித னாகவே ஆக்கிவிட்டான்' என்று அது குறிக்கிறது.
திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவீபதிக்கு நிறுவப்பட்ட வீரக்கோயில் அழியாது நிலவுகின்றதென்று தெரிய வருகிறது.
பல்லவர் பக்கத்துக்குப் போர் மிகப் பெரிய வெற்றி,பாண்டி யரோ அதில் கிட்டத்தட்டத் தம் பேரரசு வலுவையே இழந்தனர். ஆயினும் வெற்றிபெற்ற பல்லவரும் அவ்வெற்றியின் பயனைப் பெற முடியவில்லை. வடக்கிலும் தெற்கிலும் இருபேரரசுகளுடன் நீடித்த போட்டியிட்டு அவ்வரசு தளர்ந்து போய்விட்டது. இவ்வெற்றியைப் பயன்படுத்தியிருக்கக்கூடிய வீரமும் வாய்ப்பும்