பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

199

உடையவன் கங்கன் பிருதிவீபதி. அவன் போரில்பட்ட சமயம், வலிமை வாய்ந்த பின்னுரிமையாளர் இல்லாது போயினர். ஆகவே தென்ன கத்தின் பேரூழும், இந்திய மாநிலத்தின் ஆகூழும் போரின் பயனை அப்போது உருவில் சிறிதாய் இருந்த பேரரசுக் குழந்தையாகிய சோழ அரசுக்கே அளித்தன.

போரில் உதவியதற்குரிய பரிசாக ஆதித்த சோழனுக்குத் தஞ்சையைச் சூழ்ந்த பகுதி அளிக்கப்பட்டது. அதனை அவன் இறுகப்பற்றினான். அதையே மூலதளமாகக்கொண்டு தன் தலைமுறைக்குள் பல்லவருடைய படையை வீழ்த்தி, பாண்டியர் பக்கம் திரும்புவதற்குச் சோழ அரசைப் பக்குவப்படுத்தினான். கரகிரிப்போர் (880-890)

பாண்டியன் பராந்தக வீர நாராயணன் இப்போரில் உக்கிரன் என்ற ஒரு தலைவனை வென்று பெண்ணாகடத்தை அழித்தான்.

நிரவத்யபுரம், வெருவங்கூர்ப் போர்க்களங்கள் (888 – 918) சாளுக்கிய மரபு

இரண்டாம்புலிகேசிக்குப்பின் இரண்டாய்ப் பிரிந்தது. பல்லவப் பேரரசின் வடபகுதியாகிய வேங்கிநாட்டை கீழைச் சாளுக்கியர் என்ற பிரிவினர் ஆண்டு வந்தனர். அவர்களில் போரில் வல்லவனெனப் பேர் பெற்றவன் சாளுக்கிய வீமன். அவன் இராஷ்டிர கூடப்பேரரசன் மூன்றாம் கிருஷ்ணனையும் அவனுக்கு உதவியாக வந்த கருநாடக அரசர்களையும் கூர்ச்சர (குஜராத்) நாட்டு அரசரையும் ஒருங்கே இப்போர்க்களங்களில் முறியடித்தான் என்று மசூலிப்பட்டணம் பட்டயங்களால் அறிகிறோம்.

ப்போர்களில் இராஷ்டிரகூடரின் படைத்தலைவன்

குண்டய்யா என்பவன் ஆவன்.

மாந்தரவு, மதுமதுகு, மண்ணெ, மங்கள், சோரமதிப் போர்க்களங்கள்

தென்னாட்டின் தென்கோடியாகிய தமிழகத்திலும், வடகோடி யாகிய கோதாவரி கிருஷ்ணா இடைநிலப் பகுதியிலும் தான் பேரரசுகளின் பெரும் போட்டிகளால் ஏற்பட்ட சுழிகள் சிற்றரசுகளின் வாழ்வைக் கரைப்பது காண்கிறோம்.