பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(200

அப்பாத்துரையம் - 16

டைக்காலத்தில் மட்டுமன்றிப் பிற்காலங்களில்கூடத் தென்னாட்டு வாழ்வின் நடுமையச் சுழலாக மைசூரும் தற்கால இராயலசீமாப் பகுதியுமே இயங்கியுள்ளன என்பது காணலாம். இப்பகுதிகள் தான் சங்க காலத்தில் 'வடுகநாடு' என்று குறிக்கப்பட்ட குறிஞ்சிமுல்லை நிலப்பகுதிகள் ஆகும். இங்கே கங்கர், கடம்பர், பாணர், வைடும்பர், நுளம்பர் ஆகியோரும், இருங்கோல சோழர், உச்சங்கிப் பாண்டியர், தெலுங்குச் சோடர் போன்ற பாண்டிய, சோழ மரபின் கிளைக்குடிகள் பலவும் சுழலும் சுழற்சியின் வரலாறு தென்னாட்டு நாகரிக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தென்னாட்டு வரலாற்றின் பலபுதிர்களை இப்பகுதி பற்றிய நுணுகிய விளக்க வரலாறு விடுவிப்பது உறுதி.

ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசுப் போட்டிகளில் சிக்கிக் கங்கர் மிகவும் வலுவிழந்திருந்தனர். அவர் களிடையே ஏற்பட்ட பிளவுகள் இதனை மிகுதிப்படுத்தின. இவற்றுள் ஒன்று அரசுரிமைப் போட்டியாகத் தொடங்கிக் கங்க மரபையே இரு மரபுகளாக்கி, இப்பகுதிச் சிற்றரசுகளையும் இரு கட்சிகளாக்கிற்று. அவர்களிடையே ஓயாத போராட்டங்கள் நடைபெற்றன. அப் போராட்டத்தைச் சேர்ந்த போர்களே மேற்குறிக்கப்பட்டவை.

கங்க அரசுரிமையாளர்களில் ஒருவன் முதலாம் பிருதிவீபதி திருப்புறம்பியப் போரில் வீர மறைவுற்றவன் இவனே. அவனைப் பாணரும் வைடும்பரும் ஆதரித்தனர். அவனை எதிர்த்த உரிமை யாளன் முதலாம் இராசமல்லன். அவனை நுளம்பரும் தெலுங்க சோடரும் ஆதரித்தனர்.

இம் மரபினர் நீடித்து ஆற்றிய உட்பகைப் போர்க்களங் களில் சோரமதி முக்கியமானது. இது அனந்தப்பூர் மாவட்டத்தில் பெனுகொண்டா வட்டத்தைச் சார்ந்த தற்காலச் சோளமாரியே யாகும். இப்போர் கி.பி. 878-ல் நடைபெற்றதென்று அறிகிறோம். அதில் வெற்றிபெற்றவன் முதலாம் பிருதிவீபதியும் அவன் தரப்பினருமே. ஆயினும் இராசமல்லன் முற்றிலும் வலுவிழந்து விடவில்லை. திரும்புறம்பியப் போரில் முதலாம் பிருதிவீபதி இறந்ததனால் இராசமல்லன் மரபு மீண்டும் வலுவுறத் தொடங்கிற்று.