பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

தென்திசை உயிர் வளம்

அப்பாத்துரையம் - 16

சங்ககாலப் பேரரசுகள் தாண்டி இப்பண்புகளில் சங்க காலத்துக்குப் பிற்பட்ட பேரரசுகள் பொதுவாகவும், சோழப் பெரும் பேரரசு சிறப்பாகவும் வளர்ச்சி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இவை களப்பிரர் எழுச்சியின் நற்பயன்கள் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

சங்ககாலப் பேரரசுகள், முடியரசுகள் சிற்றரசுகளின் எல்லையற்ற பலதிசைப் போட்டிகள். சங்க காலத்துடன் ஒழிகின்றன. மூவரசுகளுக்கே பேரரசுக் குத்தகை உரிமை என்ற உயிரற்ற மரபும் ஒழிகின்றது. அடுத்த ஆறு நூற்றாண்டுகளுக்குத் தமிழகத்துக்குள்ளே பாண்டிய பல்லவப் பேரரசுகள் இரண்டு மட்டுமே போட்டியிடுகின்றன. இவை நீங்கிய தமிழ் முடியரசுகள் சிற்றரசாக இயங்கிய சோழ அரசும், கங்க அரசுமே, தமிழகத்துக்கு வடக்கிலும் தென்னாட்டின் வடதிசைப் போட்டியில் ஆந்திர, கலிங்க, கடம்ப, பாண, நாகர் போட்டிகள் ஒடுங்கி, ஆந்திரப் பேரரசில் குறைந்த, ஆனால், அதைவிட நீடித்த நிலையான பேரரசாக, சாளுக்கியப் பேரரசு ஒன்றே நிலவிற்று. இமய எல்லைக்குட்பட்ட வட மாநிலத்திலும் ஆந்திரர் ஒன்றுபடுத்தும் திறனால், குப்தர் அல்லது ஹர்ஷன் பேரரசு ஒன்றே நிலவிற்று.

சங்க

காலத்தைப்போலவே ஆற்றல் உயர்நிலை தெற்கிலேயே இன்னும் இருந்தது. ஹர்ஷனைச் சாளுக்கிய புலிகேசியும், சாளுக்கிய புலிகேசியைப் பல்லவ மகேந்திரவர்மனும், பல்லவர்களைப் பாண்டியரும் அடிக்கடி வென்றனர். அத்துடன் ஏழாம் நூற்றாண்டின்பின் வடதிசைப் பேரரசுகள் யாவும் சிதறுண்டதனால் அவ்வெல்லை, இஸ்லாமிய இனங்களின் படையெடுப்புக்கே எட்டு நூற்றாண்டுகள் வாயில் திறந்து வைத்துக் காத்துக் கொண்டேயிருக்க நேர்ந்தது. தென்னாடோ, பின்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் பேரரசாட்சியைக் கருவில் கொண்டிருந்தது. தமிழகமோ, சோழப் பேரரசுமூலம் மீண்டும் இமயமும், ஈழமும், கடாரமும் பரவத்தக்க வளர்ச்சியை யடைந்து வந்தது.