பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

டைக்கால மறுமலர்ச்சி

சு

(205

இடைக்காலத்தில் தமிழகத்தில் இரண்டு பேரரசுகள் இருந் தாலும், பழமையான மரபில் வந்த பாண்டியப் பேரரசே பேரளவில் சோழப் பெரும் பேரரசின் மறுமலர்ச்சிக்கும் புது மலர்ச்சிக்கும் வழிவகுத்த பேரரசு என்னலாம். ஏனென்றால் அது தமிழக முற்றிலும் பரவ முடியாத நிலையிலும், தமிழகம் கடந்து பழந் தமிழகப் பகுதியாகிய மலையாள நாடும் கன்னட நாடும் உள்ளடக்கிக் குடகுவரையிலும் துங்கபத்திராவரையிலும் பரவிற்று. அத்துடன் கடலகத்தில் அது ஈழங் கைக் கொண்டிருந்தது. ஆனால், அதே சமயம் சங்ககால ஆந்திரப் பேரரசு நீங்கலாக தென்னகப் பேரரசுகளில் தமிழகப் பேரரசுகள், அரசுகள் மட்டுமே கடலாட்சி பெற்றிருந்தன. பல்லவப் பேரரசு புதிய தமிழ் மரபாயிருந்தாலும், கடலாட்சியில் முத்தமிழ் அரசுகளுடன் சரிசம பங்கு கொண்டிருந்தது. அதன் தாயகம் தமிழருள் திரையர் அல்லது அல்லது குறும்பர் குடியாட்சிப் பகுதியாயிருந்தது என்பதையும், இத்திரையர் மரபினரே ஆந்திரர் என்பதையும், இது நினைவூட்டுகிறது.பண்டைக்காலத்திலிருந்தே கீழ்திசைக் குடியேற்றங்களில் முத்தமிழ் அரசர் குடிகளையும் ஆந்திர கலிங்கக் குடிகளையும் போலவே, திரையர் அல்லது பல்லவர் குடிகளும் பெரிதும் பங்கு கொண்டிருந்தனர்.

தமிழகக் கடலாட்சி வளர்ச்சியில் பிற தமிழரசுகளுடன் பல்லவப் பேரரசர் பங்கு கொண்டிருந்ததன்றி, சிற்பம், இசை ஓவியம் ஆகிய கலைகளிலும் அவர்கள் தனி சிறப்புக்குரிய பங்கு கொண்டிருந்தனர். சங்க காலத்தில் பரிபாடலுக்குப் பண் வகுக்கப் பட்டிருந்தது போல, பாண்டிய பல்லவப் பேரரசர் காலத்திலேயே தேவாரத்துக்குப் பண் வகுக்கப்பட்டது. ஓவிய சிற்பக் கலைகளில் பல்லவர் பங்கு முனைப்பானது. மிகப் பெரியது. அதில் மறுமலர்ச்சி மட்டுமன்றிப் புதுமலர்ச்சியும் கண்டவர்கள் அவர்களே என்னலாம். சங்க கால இசை மரபில் சிறிதளவேனும் தேவாரத்தால் நமக்கு வந்து எட்டியதுபோல, மரமும் சுண்ணமும் செங்கலும் வைத்துக் கட்டப்பட்ட சங்க காலக் கோயிற் பண்புகளை, கல் தளிகளாகப் புதுவது புதுக்கி நமக்கு நிலையான படிவங்களாக்கித் தந்தவர்களும் பல்லவர்களே. இத்துறையில் அவர்கள் சோழ பாண்டிய விசயநகரச் சிறப்பிற்கு வழி காட்டியவர்கள் ஆவர். அது மட்டுமல்ல. சங்க காலப் பண்பைக்