(206
அப்பாத்துரையம் - 16
கெடாது காத்ததன் மூலம் இன்று அவர்களைவிட முனைப்பான புகழுக்கு உரியவராகின்றனர்.
பாண்டிய பல்லவர் ஆட்சி இந்தப் பல்வேறு துறைகளிலும் சோழப் பேரரசர் புது மலர்ச்சிக்குரிய மறுமலர்ச்சிப் படியாய் அமைகிறது.
சோழப் பெரும் பேரரசின் தனிச் சிறப்புக்கள்
ய
சங்க காலப் பேரரசுகளின் தற்காலிக எல்லைகளையும் சிதறிய எல்லைகளையும் சோழப் பெரும் பேரரசு ஒரே தொடர்ந்த எல்லை ஆக்கிற்று. ஒரே நேரடி ஆட்சி எல்லையும் ஆக்கிற்று. இடைக்காலப் பாண்டிய பல்லவர் அரசுகளின் செயல்களையும் கனவுகளையும் தாண்டி அது பரவிற்று. அத்துடன் முத்தமிழ் அரசரும் பல்லவரும் பிறதென்னாட்டு அரசரும் நாடு, மாவட்டம், வட்டம், சிறுவட்டம் ஆகிய ஆட்சி எல்லைகளையே வகுத்திருந்தனர். நாடு என்ற பெயரைப் பழய குடியாட்சி எல்லையாகிய சிற்றெல்லையாக்கி, அதன் மீது வளநாடும் கோட்டமும் வகுத்தவர்களும், பழய அரசர் நாட்டெல்லைகளையும், பேரரசு நாட்டெல்லைகளையும் தம் பெரும் பேரரசின் மண்டலங்களாக வகுத்தவர்களும் சோழப் பெரும் பேரரசர்களே. அவர்கள் மண்டலத் தலைவர்கள் உள் நாட்டில் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (Governors) போலவும், வெளிநாட்டில் தற்போதைய அரசுப் பேராளரைப் போலவும் (Viceroys of Consuls) ஆண்டனர்.
சோழப் பெரும் பேரரசின் புது மலர்ச்சியின் இன்னொரு கூறு சமய, பண்பாட்டுத்துறை ஆகும். இவ்விரு துறைகளிலுமே சங்ககாலத்திலிருந்து தமிழர் குடியாட்சிப் பண்பும் தற்பண்பும் பழந் தமிழ் நாகரிக மரபும் கெட்டே வந்தன. ஆனாலும் தமிழகமிழந்த இழப்பு முற்றிலும் வீண் போகவில்லை, தொலை எல்லையில் புறஉலகு தாவி இராட்ச வளர்ச்சியாக வளர்ந்த பழந் தமிழ்ப் பண்பு இப்போது அணிமை எல்லையில் குறைந்த அளவில், தமிழகம் கடந்த மாநிலத் தேசியப்பண்பாக ஓங்கி வளர்ந்தது.
சங்ககாலத்திலேயே யானை பழக்குபவர் ‘வடமொழி' என்ற ஏதோ ஒரு குழுமொழியைப் பயன்படுத்தினர்
என்று