பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

(207

அறிகிறோம். வழக்கிறந்த பழந் தமிழ்த் திரிச்சொற்களும் உரிச் சொற்களும், நாகரின் பழந்தமிழ்த் திசைச் சொற்களும் இதனை உருவாக்கப் பயன்பட்டிருக்கக் கூடும். பிற்காலத்தார் இதனை வடதிசை மொழி என்று கருதுவதற்கேற்ப, இதன் வகைகளாகவும் சங்க காலத்திறுதியிலே சமஸ்திருதமாகவும் வளர்ச்சியுற்றன. ஆந்திர பல்லவர்கள் தொடக்கத்தில் பாளியையும் பின்னரே சமஸ்கிருதத்தையும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. முதலில் காஞ்சியிலும் காசுமீரத்திலும் வடக்குத் தெற்குக் கோடிகளில் பண்படுத்தப்பட்ட இந்தப் பழய சமஸ்கிருதமே, குப்தர் காலமுதல் கங்கை வெளியிலும் பரவி, அங்குள்ள இன்றைய இந்தி போன்ற ஒரு பழங்காலக் கலவை மொழியுடன் சேர்ந்து பிற்கால இலக்கிய வடிவம் வாய்ந்த சமஸ்கிருதமாயிற்று.

தமிழகப் பண்பாட்டின் சிதைவையும் தமிழக இயல்கலை நூல் துறைகளையும், அவற்றின் உயிர் மரபினின்றும் பிரித்து, வளராத ஆனால், பரந்த மரபுகளாக சமஸ்கிருதமூலம் இந்தியா எங்கும் பரப்ப உதவிய பேரரசு பல்லவப் பேரரசே புத்த சமயத்துக்கு அசோகன் செய்த பணியை சமஸ்கிருதத்துக்கு ஆற்றியவர்கள் பல்லவர்களே.

'நகரங்களிலே காஞ்சி' (நகரேஷு காஞ்சி) எனக் காசி முதலிய ஏனைய நகரங்கள் பெறாத பழையபெருமையைக் காஞ்சி மாநகர் சமஸ்கிருத உலகிலே பெற்றதன் காரணம் இதுவே.

சமஸ்கிருத மொழிக்குப் பல்லவர் ஆற்றிய இதே தொண்டை, இன்னும் பேரளவாகவும் நிலையாகவும் இந்திய மாநிலப் பண்பாட்டுக்கு ஆற்றி, 'அசோகர், கனிஷ்கர், குப்தர், பல்லவர்' ஆகிய அனைவரும் சேர்ந்த கூட்டுக்கு ஒப்பான பெரும் புகழ் நாட்டிய வர்கள் சோழப் பேரரசர்களே.

இந்திய மாநிலத் தேசியத்தின் அடித்தளம்

சோழப் பெரும் பேரரசர் இல்லையானால், இன்றைய இந்திய மாநிலம் பெயரளவுக்குக் கூட ஒரு தேசமாய் நிலவியிருக்க முடியாது என்னலாம். ஏனெனில் அதன் அடிப்படைப் பண்