(208
அப்பாத்துரையம் - 16
பாட்டை உருவாக்கியவர்கள் அவர்களே. பிரிட்டிஷ் ஆட்சி ஏடனும், இலங்கையும், பர்மாவும், மலாயாவும் பரந்திருந்தது. ஆயினும் 1947 -ல் புதிய தேசிய எல்லை அமைந்தபோது, அது பெரிதும் சோழப்பேரரசின் எல்லைக்கப்பால் செல்லவில்லை என்பதை வரலாற்றின் தொலை விளைவுகளைக் கணித்துக் காண்பவர் கவனித்தல் வேண்டும், மற்றும் அப்பெரும் பேரரசு பரவாத தென்னாட்டின் வட மேல் திசையும் இந்தியாவின் வடமேல் திசையும் மேலை நாட்டவர் தொடர்பு காரணமாகச் செல்வத்தில் முன்னேறினும், இலக்கியம், கலை பண்பாட்டுத் துறைகளில் இன்னும் பிற்பட்டே இருப்பது காணலாம்.
மொழியும் இலக்கியமும் இல்லாத வடதிசைக்கு, ஒரு சமஸ்கிருதத்தையே பல்லவப் பேரரசு உருவாக்கித் தரமுடிந்தது. ஆனாலும் பாண்டிய பல்லவப் பேரசுகளின் நிழலிலேயே வளர்ந்த சமயப் பேரியக்க அலைகளின் பயனை -சைவ, வைணவ இயக்கங்களின் விளைவை - சோழப் பெரும் பேரரசே கூர்ச்சரத்துக்கும் கங்கை வெளிக்கும் கொண்டு சென்றது. இதன் பயனாகத் தென்னாடெங்கும் சோழப் பெரும் பேரரசர் காலத்திலேயே மலையாளம். தெலுங்கு, கன்னடம் முதலிய தமிழின மொழிகளில் இலக்கிய வளம் உண்டாயிற்று. அதே காலத்திலேயே மராத்தி, வங்காளி, இந்தி, உருது ஆகிய வடதிசைத் தாய்மொழி இலக்கியங்களுக்குரிய கருவிதைகளும் எட்டி விதைக்கப்பட்டு விட்டன என்பதனைக் காணலாம்.
சோழப் பெரும் பேரரசர் பரப்பிய இந்தப் பண்பாடு தற் காலிகமானது என்று தோன்றினாலும், வருங்காலத்தின் நிலையானதாகவே அமையக் கூடும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சங்க காலத்தில் தமிழகத்தில் மட்டுமே வளர்ந்த பண்பாடு, அது கடந்த களர்நிலத்தால் அழிவெய்த நேர்ந்ததுபோல, சோழப் பெரும் பேரரசு பரப்பிய பண்பாடும் அப்பேரரசின் எல்லைக்கப்பால் இருந்த களர்நிலத்தாலேயே அணிமைக்காலத்தில் தளர்வுறத் தொடங்கியிருந்தது. ஆயினும் நாகரிக மேலை ஆட்சியில் சோழப் பெரும் பேரரசர் ஆட்சி எல்லை கடந்து ஆசியா எங்கும் பண்பாடு பரந்து வருகிறது. எனவே சங்க காலத்துக்குப் பின் தமிழகத்திலும், சோழப் பெரும் பேரரசர் ஆட்சிக்குப் பின் இந்தியாவிலும், மேலை நாகரிக