தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
(209
ஆட்சியில் தென்கிழக்காசியாவிலும் ஏற்பட்ட தளர்ச்சி இனி நீங்கி, சங்ககாலத் தமிழக ஒளி ஆசியாவிலும் உலகு முழுவதிலும் அணிமை வருங்காலத்தில் எளிதில் பரவி நிறைவுறும் என்னலாம்.
தன் பண்பும் தன் மரபும் இழந்து சூழ்பண்பு வளரக் காத் திருந்த தமிழகம், சூழ் பண்பின் தளர்ச்சி நீக்க மீண்டும் கிளர்ந் தெழ வேண்டும். கிளர்ந்தெழுவது இன்றியமையாத் தேவை. ஏனெனில் கீழை உலகைத் தட்டி எழுப்பிய மேலை ஐரோப்பிய நாகரிகத்திலும் தளர்ச்சியின் சின்னங்கள் காணப்படுகின்றன. கீழ்திசை நாகரிகங்களின் மறுமலர்ச்சியால் எழுந்த கிரேக்க உரோம நாகரிகங்கள் அழிவுற்றபின் அவற்றின்
தாலை
மறுமலர்ச்சியாய் எழுந்ததே தொலைமேலை நாகரிகம். அது உயிர்பெற மீண்டும் நாகரிக வேர்முதல் நிலமான தமிழகம், அத்தமிழகத்துடன் அது மீண்டும் புதுத்தொடர்பு கொள்ளுவதும், மீண்டும் புதுமலர்ச்சி பெறுவதும் உயிர் நிலைத் தேவைகள் ஆகும்.
சோழப் பெரும் பேரரசின் வளர்ச்சிப் படிகள்
சோழப் பெரும் பேரரசின் வளர்ச்சியில் நாம் நான்கு படிகளைக் காணலாம். பாண்டிய பல்லவ மறுமலர்ச்சிக் கால முழுதும் சோழர் சிற்றரசராய் அடங்கியிருந்தனர். ஆனால், சங்க காலப்பேரரச அவாவை அவர்கள் பொறுமையுடன் ஆறு நூற்றாண்டு தம் சிற்றரசுக் கருவில் அடக்கி வைத்திருந்தனர் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இக்காலத்திலேயே பாண்டியர், சோழர் மரபுகளின் கிளைகள் தென்னாடெங்கும் பரவிப் பல புதிய சிற்றரசுகளை அமைத்துப் புதுநிலத்தில் வளரப் பெற்றன. இவற்றின் வரலாறு தமிழகம் கடந்த தமிழர் வரலாற்றின் ஓர் உயிர் நிலைக் கூறாக இனித்தான் தொகுக்கப்பெறல் வேண்டும். ஆனால், இடைக் காலப் பாண்டியரால் குடகில் வெல்லப்பட்ட கொங்க மரபினரும், உச்சங்கிப் பாண்டியரும் தெலுங்குச் சோடரும் வடக்கே கலிங்கத்தில் ஆண்ட சோழகங்கரும் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
சோழப் பெரும் பேரரசின் கருநிலைக்காலம் எனப் பாண்டிய பல்லவப் போட்டிக் காலத்தைக் குறிக்கலாம்.