தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
(211
ஆட்சியும் மாநிலத்தின் அரசியல் வாழ்வைக் குலைத்திருக்கா தென்னலாம்.
சோழர் மீட்சி: விசயாலய சோழன்
சங்ககாலச் சோழர் புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தையோ, உறையூரையோ தலைநகராகக் கொண்டு ஆண்டனர் என்று அறிகிறோம். ஆனால், இடைக்காலச் சோழர், சிற்றரசராக இருந்த போது கும்பகோணத்துக்கு மூன்று கல் தென்கிழக்கிலிருந்த பழயாறையையே தலைநகராகக் கொண்டிருந்தனர் என்று அறிஞர் பண்டாரத்தார் நிலை நாட்டியுள்ளார். அது அந்நாளில் பெருநகராய், இக்காலத்திய முகையூர், பட்டேச்சுரம், திருச்சத்திமுற்றம், அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், கோணப் பெருமாள் கோயில், திருமேற்றளி, தாராசுரம், நாதன் கோவில் ஆகிய பல சிற்றூர்களை உள்ளடக்கியதாய் இருந்ததென்றும் அவர் கூறுகிறார்.
இடைக்காலச் சோழர்களைப் பற்றித் துண்டுத் துணுக்கான செய்திகளன்றிக் கோவையாக எதுவும் நமக்குத் தெரிய வரவில்லை. ஏனெனில் பிற்காலப் புகழ்ச் சோழர் பெருமைப் படத்தக்க எச்செயலையும் அவர்கள் செய்யவில்லை. சங்ககாலச் சோழரைத் தம் முன்னோராகக் குறிக்கும் வரலாற்று நோக்குடைய பிற்காலச் சோழர் இவ்விடைக்காலச் சோழரைப் பற்றி வாளாமை சாதித்துள்ளனர்.
பெருஞ்சோழர் காலத்து இலக்கியத்தில், அப்பெருஞ் சோழர்களின் முன்னோனாக,
“மீதெல்லாம்,
எண்கொண்ட தொண்ணூற்றின்
மேலும் இருமூன்று
புண்கொண்ட வென்றிப்
புரவலன்”
அடுத்தடுத்துச்
சீறும் செருவில்
திருமார்பு தொண்ணூறும்
(விக்கிரம சோழன் உலா 27 - 32)