212 || |– –
ஆறும் படுதழும்பின் ஆரத்தோன்”
“புல்லார்
தொழும்புடைய ஆகத்துத்
தொண்ணூறும் ஆறும்
தழும்புடைய சண்டப்பிர
சண்டன்”
அப்பாத்துரையம் - 16
(குலோத்துங்க சோழன் உலா 38 - 44)
(இராசராசசோழன் உலா 35 - 40)
என்று ஒட்டக்கூத்தப் பெருமானின் மூவருலாக்களும்,
"புண் ஊறு தன்திரு
மேனியில் பூண் ஆகத்
தொண்ணூறும் ஆறும் சுமந்தோன்”
என்று சங்கரசோழன் உலாவும், அடிக்கடி போர் செய்து மார்பில் 96 புண்களைப் புகழணியாகக் கொண்ட ஒரு பெருஞ்சோழனைப் பற்றிப் புகழ்கின்றன. இது பெருஞ் சோழரில் முதல்வனான விசயாலயனையே (846 - 881) குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. பாண்டியப் பேரரசருக்கோ, பல்லவப் பேரரசருக்கோ அடங்கிய ஒரு சின்னஞ் சிறு குடிவேந்தாயிருந்த சோழமரபை ஒரு வலிமை வாய்ந்த அரசாக்குவதிலேயே அவன் இத்தனை கடும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றுள் முக்கியமான ஒன்றே நமக்குத் தெரியவருகிறது. அவன் ஆட்சித் தொடக்கத்தில் கி.பி 846 - அவன் முத்தரையர் என்ற பெயருடைய குறுநில மன்னரிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான்.
இடவைப் போரில் இந்தத் தஞ்சையையும் பாண்டியன் இரண்டாம் வரகுணன் அவனிடமிருந்து கைப்பற்றினான். ஆனால், 880-ல் நடைபெற்ற திருப்புறம்பியப் போரில் சோழனுக்குத் தஞ்சை மட்டிலுமன்றி, சோழநாட்டின் பெரும்பகுதியும் மீண்டும் கிடைத்தது. இப்போர்க்காலத்தில் விசயாலயனே சோழ அரசனாயிருந்தபோதிலும், அவன் முதுமை காரணமாக அவன் மகன் ஆதித்தனே போரில் ஈடுபட்டிருந்தான். 871-லேயே அவனுக்கு விசயாலயன் இளவரசுப்பட்டம் கட்டியிருந்தான். போரில் பாண்டியன் படுதோல்வியடைய, கங்கன்