தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
(213
பிருதிவீபதி மாள, சோழனும் பல்லவனும் மட்டுமே வெற்றியின் பயனை நுகர்வதற்கு மீந்திருந்தனர். பல்லவனுக்கும் படைவலு மிகவும் குறைந்துவிட்டதால், சோழ நாட்டையும் சேர்த்து ஆளும் ஆற்றலில்லாமல் அதைச் சோழன் வசமே விட்டு விட்டான் இவ்வகையில் ஆதித்தன் ஆட்சித் தொடக் கத்திலேயே சோழர் சோழநாட்டின் மன்னராய் வலுவுற்றனர்.
சோழர் தொண்டை நாட்டு வெற்றி
ஆதித்த சோழன் (871 - 907) ஏதோ ஒரு போரில் ஏறத்தாழ 981-க்கு முன் பல்லவப் பேரரசின் கடைசி அரசனான அஜிராதனை ஒரு போரில் கொன்று, தொண்டைநாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டான். கொங்கு நாட்டையும் அவனே கைப்பற்றினான் என்று அவன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் தொகைப் பாடல் ஒன்று கூறுகிறது.
"சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பலம் முகடு கொங்கின் கனகம் அளித்த ஆதித்தன்”
அடுத்த ஆட்சியில் கொங்கு நாடெங்கும் சோழர் கல் வெட்டுக்கள் காணப்படுவது இக்கூற்றை உறுதிப்படுத்துகிறது. இலங்கையையும் அவன் வென்றானென்று அதே புலவர் குறித் துள்ளார்.
“புலம்மன்னிய மன்னைச் சிங்களநாடு பொடிபடுத்த குலமன்னிய புகழ்க் கோகனநாதன்”
எக்காரணத்தாலேனும் அவன் சிங்கள நாட்டின் மீது படை யெடுத்துச் சில வெற்றிகள் பெற்றிருக்கக் கூடும். ஆனால், இது பற்றிய வேறு சான்று எதுவும் தமக்குக் கிட்டவில்லை.
மைசூரில் ஆண்ட கங்க அரசன் முதலாம் பிருதிவீபதியின் புதல்வன் இரண்டாம் பிருதிவீபதியுடனும், வடதிசையாண்ட