214
அப்பாத்துரையம் - 16
இராஷ்டிரகூடப் பேரரசன் இரண்டாம் கிருஷ்ணனுடனும் ஆதித்த சோழன் நட்புடையவனாகவே இருந்தான். அவன் மனை வியர் இருவருள், பட்டத்தரசியான ளங்கோப்பிச்சி இராஷ்டிரகூடப் பேரரசன் புதல்வியே; மற்ற மனைவி திரிபுவன மாதேவி பல்லவமரபுக்கு உரியவளாய் இருந்தாள்.
சோழ பாண்டியப் போராட்டம்: வெள்ளூர்ப்போர் கி.பி. 919
சோழ மரபைப் பேரரசநிலைக்குக் கொண்டுவந்த முதற் பெருஞ் சோழன் முதலாம் பராந்தகனே (907 -953). அவன் ஆட்சியின் முதல்செயலும், அவன் ஆட்சியின் பெரும் பகுதியை ஆட்கொண்ட செயலும் பாண்டி நாட்டுப் போராட்டமேயாகும். சோழநாடும் தொண்டைநாடும் கொங்குநாடும் பரந்த தன் வல்லாட்சியுடன் பாண்டி நாட்டையும் சேர்த்து, அவன் தமிழக, முதற் பேரரசனாக அரும்பாடுபட்டான். இப்போராட்டமே இறுதியில் அவனை இலங்கைமீது படையெடுக்கவும் தூண்டிற்று.
பராந்தகன் தன் ஆட்சியின் முதல் மூன்று ஆண்டு களிலேயே பாண்டியனைப் பல போர்களில் முறியடித்து மதுரையைக் கைப்பற்றியிருந்தான். 910ஆம் ஆண்டுக் கல் வெட்டுக்களே அவனை மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று பாராட்டுகின்றன. ஆனால், பாண்டிய வெற்றி அவ்வளவு எளிதாக அவனுக்கு நிலையான வெற்றியாகி விடவில்லை.
இப்போராட்டத்தில் பாண்டியனக் கெதிராகச் சோழனை ஆதரித்த வேளிர் இருவர் ஆவர். ஒருவன் பாண்டிய நாட்டெல்லையிலேயே தற்காலப் புதுக் கோட்டைப் பகுதியில் ஆண்ட கொடும்பாளூர்த்தலைவன். மற்றவன் கீழைப்பழுவூருக் குரிய பழுவேட்டரையன் கண்டன் அமுதன்.
இச்சமயம் பாண்டி நாட்டை ஆண்டவன் இடைக்காலப் பாண்டியப் பேரரச மரபின் கடைசி மன்னனான மூன்றாம் இராச சிம்மன் (900 -919). அவன் பதினான்காம் ஆட்சியாண்டில் வெளி யிட்ட சின்னமனூர்ச் செப்பேடு தஞ்சையர் கோனையும் கொடும் பாளூர்த் தலைவனையும் போர்களில் வென்றதாகக் கூறுகிறது. பாண்டியனுக்கும், சோழனுக்கும் 910-க்கு முன்னும் பின்னும் பல போர்கள் நடந்தன என்றும், சிலவற்றில் பாண்டியனும் சிலவற்றில்