பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

சோழனும் வெற்றி பெற்றனர் என்றும் இது காட்டுகிறது.

(215

910-இல் அரசிருக்கை இழந்த பாண்டியன் அந்நாளில் இலங்கையை ஆண்ட ஐந்தாம் கஸ்ஸபன் உதவி கோரினான். இலங்கை வேந்தன், சக்கன் என்ற ஒருபடைத் தலைவனை ஒரு பெரும் படையுடன் அனுப்பி உதவினான். அப்படையின் பெருக்கைக் கண்டு அது நாவலந்தீவு (இந்தியா) முழுவதையும் வென்றுவிட முடியுமென்று மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் களித் தாயதாக இலங்கை மகாவம்சோ கூறுகிறது. சங்ககாலத் தமிழர் பேரரசக் கனவார்வம் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பாண்டியப் பேரரசர் உள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்ததென்பதை இது காட்டுகிறது. ஆனால், தமிழரின் இந்தக் கனவைச் சோழரே பின்னாளில் பெரிதளவு நிறைவேற்ற இருந்தனர் என்பதை அப் பாண்டியன் எண்ணியிருக்க மாட்டான்

என்னலாம்.

வெள்ளூர்,

மதுரைக்குத்

தென்மேற்கே

சிறிது

தொலைவிலுள்ள ஓர் ஊர். அவ்விடத்தில் கி.பி.919-ல் பாண்டியப் படைகளும் படைத் தலைவன் சக்கனுடைய சிங்களப் படைகளும் சோழனை எதிர்த்துக் கடும்போரிட்டன. இப்போரில் சோழன் பராந்தகன் பெரு வெற்றியடைந்தான். கணக்கற்ற யானைகளையும் வீரர்களையும் அவன் போரில் கொன்று குவித்து, மீண்டும் மதுரையைக் கைப்பற்றினான்.

இப்போரில் சோழர் படைத்தலைவராயிருந்தவர்கள், சோழ மண்டலத்தில் பாம்புணிக் கூற்றத்தைச் சேர்ந்த அரசூருக்குரிய அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையன் என்பவனும், பரதூர் உடையான் நக்கன் காத்தனும் ஆவர்.

நாடிழந்து தோற்றோடிய பாண்டியன் மீண்டும் இலங்கை யரசனிடம் சென்று உதவி கோரினான். அவ்வுதவியை எதிர் பார்த்த வண்ணமே அவன் 923 முதல் 934 வரை பதினொரு ஆண்டுகள் இலங்கையில் கழித்தான். இலங்கை மன்னன் அவனுக்கு எல்லாவகை மதிப்பும் கொடுத்தான். ஆனால், சோழனை எதிர்க்கப் படையுதவி செய்யாமல் காலந் தாழ்த்தினான். பாண்டியன் இலங்கையில் தங்கியிருந்த 'மகத சித' என்ற கோட்டை என்று அறிகிறோம்.

டம்