பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216 ||-

இலங்கைப் படையெடுப்பு 934 - 944

அப்பாத்துரையம் - 16

934-க்குள் பராந்தகன் பாண்டி

நாட்டிலுள்ள

கிளர்ச்சிகளனைத்தையும் அடக்கிவிட்டான். அதன்பின் அவன் மதுரையில் தன்னைப் பாண்டியமன்னானக முடி சூட்டிக் கொள்ள விரும்பினான். ஆனால், பாண்டியர் தவிசும் பிற சின்னங்களும் மதுரையில் காணப்படவில்லை. தோற்றோடிய பாண்டியன் அவற்றை எடுத்துக்கொண்டு இலங்கை சென்றிருந்தான் என்று அறிந்தான். அவற்றை அனுப்பித் தரும்படி சிங்கள மன்னனுக்கு அவன் தூது அனுப்பினான்.

உதவிக்குக் காத்திருந்த பாண்டியன் இதற்குள்ளாக மனம் தளர்வுற்று, முடியையும் சின்னங்களையும் இலங்கையரசன் பாது காப்பிலேயே விட்டுவிட்டு, தன் தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமாகிய சேர நாட்டுக்கு ஓடிவிட்டான்.

பாண்டியன் தன்னிடம் நம்பிப் பாதுகாப்புக்காக விட்டுச் சென்ற சின்னங்களை இலங்கையரசன் சோழனுக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டான். இதனால் சீற்றமடைந்த சோழன் பராந்தகன், இலங்கை மீதே படையெடுத்தான். ஈழத்தில் நடைபெற்ற போரில் பராந்தகன் படை வெற்றிபெற்றது. இச்சமயம் இலங்கையரசனாயிருந்த நான்காம் உதயன், இலங்கையின் தென் பகுதியில் மலைகளின் பாதுகாப்பில் இருந்த ரோகண நாட்டுக்கு ஓடிவிட்டான். இலங்கையின் மிகப் பெரும் பகுதி பராந்தகன் கைப்பட்டது. ஆனாலும் ஓடிய இலங்கை வேந்தன், பாண்டியன் சின்னங்களையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு ஓடியிருந்தான். ஆகவே, ஈழத்தின் பெரும் பகுதியையும் வென்றபின்னும், பராந்தகன் ஈழம் சென்ற தன் நோக்கம் நிறைவேறாமலே மீள வேண்டியதாயிற்று. இச்சமயம் வட திசையில் இராஷ்டிர கூடருடன் போர் மூளத்தக்கசூழல், இருந்ததால் அவன் இலங்கைப் போரை நீடிக்காமல், 944-ல் சோழ நாடு திரும்பினான்.

பாண்டிநாட்டு வெற்றியின் பின் பராந்தகன் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் கொண்டிருந்தான். மதுரை வெற்றியும் ஈழ வெற்றியும் ஒரே தொடர்ந்த போரின்