தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
217
வெற்றிகளாதலால் அவன் இப்போது இரண்டு வெற்றிகளையும் ஒரே விருதுப் பெயராக்கி ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரசேகரி' என்று தன்னைக் குறித்துக் கொண்டான். இவ்வெற்றிகளைச் சோழர் கல்வெட்டுக்களைப் போலவே சோழ நேசன் கங்கன் இரண்டாம் பிருதிவீபதியின் கல்வெட்டுக்களும் பராவுகின்றன.
பெருஞ் சோழர் கால இலக்கியத்தில் இவ்விரு வெற்றிகளும் பல தடவை குறிக்கப்பட்டுள்ளன.
ஈழமும் தமிழ்க் கூடலும் சிதைந்து
இகல் கடந்ததோர்
இசை பரந்ததும்
(கலிங்கத்துப் பரணி: இராச பாரம்பரியம்; 23)
என்று செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியும்,
“வெங்கோல் வேந்தன்
தென்னன் நாடும்
ஈழமும் கொண்டதிறல்
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன்'
(9-ம் திருமுறை; கோயிற்பதிகம் 8)
என்று பராந்தகசோழன் மகனான கண்டராதித்தனின் 9-ஆம் திரு முறையும்,
நராதிபர்
தாழ முன்சென்று
மதுரைத் தமிழ்ப்பதியும்
ஈழமும் கொண்ட
இகலாளி!
(குலோத்துங்க சோழன் உலா: 44 - 46)
என்று ஒட்டக்கூத்தப் பெருமானின் மூவருலாவும் பாரந்தகன் வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளன.