பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 16

இராஷ்டிரகூடர் முதலாம் படையெடுப்பு : முற்காட்டுப்

(218

போர் 910

பல்லவ

இராஷ்டிரகூட மணத் தொடர்புகள் அப்பேரரசுகளுக் குள்ளே பல போர்களுக்குக் காரணமாயிருந்தது போலவே, முதலாம் பராந்தகன் காலத்திலும் மண உறவுகளால் சோழ இராஷ்டிரகூடப் பேரரசுகளுக்கு இடையேயும் பூசல்கள் மூண்டன. இவற்றுள் முதற்போருக்குக் காரணமான தொடர்பு ஆதித்த சோழனின் இராஷ்டிரகூடத் தொடர்பேயாகும்.ஏனெனில் இராஷ்டிர கூட இளவரசியே பட்டத்தரசியானதால், அவன் மகன் உரிமையை ஆதரித்து இராஷ்டிரகூட பராந்தகனுக்கெதிராக 910-ல் சோணாட்டின் வடஎல்லையின் மீது படையெடுத்தான்.

அரசன்

இப்போரில் வாணகப்பாடியை ஆண்ட வாணன் இரண்டாம் விசயாதித்தனும் (895-910); அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித் தனும் இராஷ்டிரகூடனுக்கு ஆதரவாய் இருந்தனர். சங்க அரசன் இரண்டாம் பிருதிவிபதியும், கொடும்பாளூர்த் தலைவனும் கீழைப்பழுவூர்ப் பழுவேட்டரையன் காண்டத்தின் அமுதனும் சோழருக்கு ஒத்தாசையாய் இருந்தனர்.

வாணகப்பாடி தொண்டை நாட்டின் ஒரு பகுதி. அதனை ஆண்ட பாணன் இரண்டாம் விசயாதித்தன். தொண்டை நாட்டைப் பல்லவர் மேலுரிமை ஏற்று ஆண்ட குடி மன்னனே. ஆனால், ஆதித்த சோழன் பல்லவரிடமிருந்து தொண்டை நாட்டைக்கைக்கொண்ட சமயம் அவன் பல்லவர் மேலுரிமையை எறிந்துவிட்டு, ஆதித்தன் மேலுரிமையையும் மேற்கொள்ளாமல் தன் தனியுரிமை கொண்டாடத் தொடங்கினான். ஆனால், சோழருக்கெதிராக இப்போரில் செயலாற்றியதன் மூலம் அவனது தன்னுரிமை ஆட்சிக்கு விரைவில் முடிவு ஏற்பட்டது.

முற்காட்டுப் போரில் சோழர் வெற்றி பெற்றனர்.

போரில் பெரு வீரங்காட்டியிறந்த கசவய்யா என்பவனுக்கு வீரக்கல் நாட்டியதாக ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது.

இரண்டாம் பிருதிவீபதியின் உதவிக்குப் பரிசாக, சோழன் அவனுக்கு இரு பாணர்களின் நாட்டையும் கொடுத்து மாவலி வாணராயன் என்ற பட்டமும் அளித்ததாக அறிகிறோம்.