பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

219

ஆனால், இது நிறைவேற்றப்பட்டது அடுத்த போர் முடிவிலேயே யாகும். இப்போரிலேயே சோழன் அதற்கான உறுதிமொழி அளித்திருத்தல் கூடும்.

வல்லாளப் போர் அல்லது வல்லம் போர் I (910)

முற்காட்டுப் போரில் இராஷ்டிரகூடருக்கு உதவிய பாணர் மீது சோழன் பழி வாங்க எண்ணினான். அவர்கள் நாட்டின் மீது படையெடுத்தான்.

தலை

வல்லாளம் அல்லது வல்லம் என்பது வாணர்களின் நகரமேயாகும். இது இன்றைய வட ஆர்க்காட்டு மாவட்டத்தில் குடியாத்தம் வட்டத்தைச் சார்ந்த திருவலம் என்னும் ஊரே என்று அறியப்படுகிறது.

இப்போரில் சோழர் வெற்றியடைந்த பின்னரே வாணகப் பாடியின் ஆட்சி முற்காட்டுப் போர் முடிவில் வாக்களித்தபடி இரண்டாம் பிருதிவீபதியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவலி வாணராயன் என்ற பட்டமும் சோழ அரசனால் முறைப்படி இப்போர் முடிவிலேதான் கொடுக்கப்பட்டதாகச் சோளிங்கர்க் கல்வெட்டுக் கூறுகிறது.

வாண அரசர்களை மட்டுமன்றி வைடும்ப அரசனையும் சோழன் பராந்தகன் முறியடித்து அவன் நாட்டைக் கைக் கொண்டு அவனைத் துரத்தினான் என்று தெரியவருகிறது. ஆனால், வைடும்பர் போர் தனியாகக் குறிக்கப்படாததால், பாணருடனே அவர்களும் போர் செய்து தோற்று நாடிழந்திருக்க வேண்டும். என்று தோற்றுகிறது. நாடிழந்த பாணரும் வைடும்பரும் சோழன் எதிரியாகிய இராஷ்டிரவடப் பேரரசனிடம் சென்று அவன் ஆதரவை நாடியிருந்தனர்.

சோழரின் இராஷ்டிரகூடப் படையெடுப்பு 940

பராந்தகன் தன் ஆட்சித் தொடக்கத்திலேயே தன் தந்தையின் இராஷ்டிரகூடத் திருமணத் தொடர்பு காரணமாக இராஷ்டிரகூடரைப் பகைத்துக் கொண்டிருந்தான். ஆனால், இப்பகைமை நீங்கியபின், நட்பைப் புதுப்பிக்கப் பராந்தகன் செய்த மணத் தொடர்பும் பகைமையையே வளர்த்தது. இப்பகைமை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேலாகச்