பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(220

||--

அப்பாத்துரையம் - 16

சோழப் பேரரசின் வளர்ச்சியையே தடுத்துப் பேரிடர் தருவதாக அமைந்தது.

இராஷ்டிரகூடப் பேரரசன் இரண்டாம் கிருஷ்ணன் 913-ல் இறந்தபின், அவன் பெயரன் மூன்றாம் இந்திரன் தவிசேறி 934 வரை ஆண்டு வந்தான். அவன் மகன் நான்காம் கோவிந்தன் வனப்பில் வேள்மதன் போன்றவன் என்று கூறப்படுகிறது. மூன்றாம் இந்திரன் 918லேயே அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவைத்திருந்தான்.

பராந்தகன் தன் மகள் வீரமாதேவியை நான்காம் கோவிந் தனுக்கு மணம் செய்து கொடுத்து, அதன் மூலம் புதிய இராஷ்டிர கூட நட்பை உண்டுபண்ண எண்ணினான். ஆனால், நான்காம் கோவிந்தன் அரசிருக்கை ஏறி ஓர் ஆண்டாவதற்குள் இராஷ்டிரகூடப் பேரரசில் பெரும் புரட்சிகள் உண்டாயின.

கீழைச் சாளுக்கிய அரசு இச்சமயம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது.வடதிசைப் பிரிவிலுள்ள யுத்த மல்லனுக்கும் தென் பிரிவிலுள்ள இரண்டாம் வீமனுக்கும் போர் மூண்டது.நான்காம் கோவிந்தன் இதில் தலையிட்டு, யுத்த மல்லனுக்கு உதவியாக நின்று இரண்டாம் வீமனுடன் போர் தொடுத்தான். போரில் நான்காம் கோவிந்தன் ஆதரித்த பக்கம் படுதோல்வியுற்றது.

ர்

ஏற்கெனவே நான்காம் கோவிந்தன் இராஷ்டிரகூடர் பெரு மக்களிடையே மனக் கசப்பை உண்டுபண்ணியிருந்தான்.போரின் தோல்வி அவன் மீது வெறுப்பைப் பெருக்கிற்று.அவன் சிற்றப்பன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ணன் அவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்து. தன் தந்தையான மூன்றாம் அமோகவர்ஷனையே 935-ல் இராஷ்டிரகூடத் தலைநகரான மான்யகேத நகரில் பேரரசனாக்

கினான்.

அரசிருக்கை யிழந்த சோழன் மருமகன் நான்காம் கோவிந் தன் தன் மனைவி வீரமாதேவியுடன் மாமனாகிய சோழன் மாளிகையில் தஞ்சையிலேயே வந்து அடைக்கலம் புகுந்தான். 935 முதல் 939 வரை அவன் அங்கேயே தங்கினான். 939-ல் மூன்றாம் அமோக ஷவர்ஷன் இறக்கவே, அவன் தனக்கு உதவும்படிபராந்த கனை வேண்டினான்.