பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

(221

சோழர் பெரும்படை ஒன்றுடன் நான்காம் கோவிந்தன் இராஷ்டிரகூடப் பேரரசைத் தாக்கப் புறப்பட்டான்.

கங்க அரசன் இரண்டாம் பூதுகன் மூன்றாம் கிருஷ்ணனின் தமக்கையை மணந்திருந்தான். அவன் இப்படையெடுப்பை அறிந்தவுடன் தன் மைத்துனனுக்கு உதவியாக விரைந்தெழுந்தான்.

இராஷ்டிரகூடப் படையும் கங்கர் படையும் ஒன்றாகச் சேர்ந்து 940-ல் நான்காம் கோவிந்தனையும் சோழர் படைகளையும் தாக்கிப் போரிட்டன. போரில் சோழர் படை தோற்றது. அதன் மீது மூன்றாம் கிருஷ்ணனே இராஷ்டிரகூட முடிகவித்து 968 வரை ஆண்டான்.

தன் அரசுரிமையைக் எதிர்த்த சோழர்மீது அவன் உள்ளூரக் கறுவிக் கொண்டிருந்தான்.

சீட்புலி, நெல்லூர் வெற்றிகள்

கி.பி. 941-ல் பராந்தக சோழனின் படைத் தலைவனான சிறு குளத்தூர் மாறன் பரமேஸ்வரன் என்ற செம்பியன் சோழிய வரையன், சீட்புலி நாட்டை வென்று, நெல்லூரை அழித்து விட்டுத் திருவொற்றியூர் வழியாகச் சோணாடு மீண்டான். திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று இதைத் தெரிவிக்கிறது. வீரன்மீது

நான்காம் கோவிந்தனை முறியடித்த பழிவாங்கவே இந்தச் செயல் நடைபெற்றிருக்கவேண்டும் என்னலாம். ஏனெனில் வீமன் ஆண்ட பகுதி அதுவே.

இரண்டாம் இராஷ்டிரகூடப் படையெடுப்பு: தக்கோலப் போர் 949

வெற்றி முரசுகொட்டி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவி லிருந்து புகழ் ஏணியில் ஏறிவந்த சோழப் பேரரசுமீது பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இருட் படலங்கள் வீசத் தொடங்கின. சோழர் இராஷ்டிரகூடப் படையெடுப்பின் தோல்விக்குப் பின் இந்நிலை மேலும் நெருக்கடியாகி வந்தது. ஏனெனில் சோழன் வலக்கை நண்பனாயிருந்த கங்க அரசன் இரண்டாம் பிருதிவீபதி இறந்தபின், கங்க அரசில் இருந்த இரு பிரிவினர் ஆட்சியும் இராஷ்டிரகூடப் பேரரசன் மூன்றாம்