(222
அப்பாத்துரையம் - 16
கிருஷ்ணன் மைத்துனனான இரண்டாம் பூதுகனிடத்திலேயே வந்து ஒன்று சேர்ந்தன. மூன்றாம் கிருஷ்ணன் இனி எந்த நேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்று தெரிந்து பராந்தகன் தன் வட எல்லையை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டான்.
கி.பி. 936-லிருந்து வடதிசைக் காவலின் பொறுப்புப் பராந்தகன் மூத்த புதல்வனான இராசாதித்தனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.அவன் தென் ஆர்க்காட்டு மாவட்டத்தில் தற்போது திருநாம நல்லூர் என்று அழைக்கப்படும் திருநாவலூரைத் தலைமையிடமாகக் கொண்டு படையுடன் தங்கியிருந்தான். அவன் படைத்தலைவன் சேர நாட்டு நந்திக்கரைப் புத்தூரைச் சேர்ந்த வெள்ளன்குமரன் என்பவன். அவனும் அருகில் தற்போது கிராமம் என்று வழங்கும் முடியூரில் படையுடன் தங்கினான். 940- க்குப் பின் இவ்வேற்பாடுகள் இரட்டித்தன. இராசாதித்தன் தம்பியாகிய அரிகுல கேசரியும் படையுடன் அங்கே அமர்த்தப்பட்டான்.
இராஷ்டிரகூடப் பேரரசனும் தன் படைகளை உச்ச அளவுக்குப் பெருக்கிக்கொண்டு வந்தான். அவனுக்கு உதவியாக அவன் மைத்துனனான வலிமைமிக்க கங்க அரசன் இரண்டாவது பூதுகனும், சோழனால் முன்பு துரத்தப்பட்ட இரண்டு பாண அரசர்களும், வைடும்ப அரசனும் வந்து குழுமினர். எதிரி படைகள் தொண்டை நாட்டின் வட எல்லைக்கருகேவந்துவிட்ட என்றறிந்தே பராந்தகனின் மூத்த புதல்வனான இராசாதித்தன் தன் சோழப் பெரும்படையுடன் அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான். இருபடைகளும் தக்கோலப் போரில் ஒன்றை ஒன்று தாக்கிக் கைகலந்தன.
ன
தக்கோலம் என்பது அரக்கோணத்துக்கு ஆறுகல் தென் கிழக்கிலுள்ள ஓர் ஊர். இக்களத்தில் இருதரப்பினரும் கடும் போர் புரிந்தனர். இருதிறப் படைகளிலும் ஆயிரக்கணக்கான வீரர் வீழ்ந்துபட்டனர். நெடுநேரம் வெற்றி எப்பக்கமும் சாயவில்லை. எதிரிப் படைகளே தொகையில் மிகப் பெரி தாயிருந்த போதிலும், சோழ வீரர் அஞ்சா நெஞ்சராய் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் பேரிடையூறு களுக் கிடையே போரிட்டனர்.