பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

223

ஒரு சிறு நிகழ்ச்சி போரைச் சோழருக்கு எதிராக்கிற்று. இராசாதித்தன் வீரப்போராட்டத்தில் இராஷ்டிரகூடப் படைகள் பலவிடங்களிலும் பூட்டற்றுக் குலைந்தது. கண்ட கங்க மன்னன் பூதுகன், யானைமேலிருந்த இராசாதித்தன்மீது தன் அம்புகளைப் பாய்ச்சினான். ஓர் அம்பு அவன் மார்பில் தைக்கவே அவன் உடனடியாக உயிர்நீத்தான். தலைவனில்லாப் படைகள் கட்டுக் குலைந்து குழப்பமெய்தின. மூன்றாம் கிருஷ்ணன் எளிதில் வெற்றி வாகை சூடினான்.

'இராசாதித்தன் வீற்றிருந்த யானையின் அம்பாரியையே தன் போர்க்களமாக்கி, பூதுகன் அவனை விண்ணுலகேற்றினான்' என்று பங்களூர் ஆதக்கூர்க் கல்வெட்டுக் கூறுகிறது.

சோழர் ஆதாரங்களும், இராசாதித்தன் யானைமேல் துஞ்சினான் என்றே கூறுகின்றன.

சோழப் பேரரசர் வீர வெற்றி வாழ்விலே தக்கோலப் போரைப் போன்ற பேரிடி வேறு எதுவும் கிடையாது. அந்த வீழ்ச்சியிலிருந்து அது பேரரசு நிலைக்கு மீளக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆயிற்று.

இராஷ்டிரகூடப் படைகள் தங்கு தடையின்றிச் சிலகாலம் தொண்டை நாடெங்கும் சுழன்று திரிந்தன. இராஷ்டிரகூடக் கல்வெட்டுக்கள் மூன்றாம் கிருஷ்ணனின் வெற்றியைப் பலபட மிகைபடுத்தத் தவறவில்லை. அவை 'கச்சியும் தஞ்சையும் காண்ட கன்னட தேவன்' என்ற விருதுப் பெயரை அவனுக்குச் சூட்டுகின்றன. தொண்டை நாடு முழுவதும் வென்றதுடன் நில்லாமல் சோழ நாட்டையும் கைக்கொண்டான் என்று கூறுவன சில. இராமேசுவரத்தில் வெற்றித் தூண் நாட்டினான் என்றும், இலங்கையரசனைப் பணிய வைத்து அவனிடம் கப்பம் பெற்று மீண்டான் என்றும் பிதற்றுகின்றன சில. இவையெல்லாம் ஆதாரமற்ற மிகையுரைகள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் தன்னார்க்காட்டுத் திருவதிகைக்குத் தெற்கே சோழர் கல்வெட்டன்றி இராஷ்டிரகூடக் கல்வெட்டு எதுவும் அகப்படவில்லை. அதற்கு வடக்கில்கூட 955 கழிந்த பின்னரே படிப்படியாக இராஷ்டிரகூடக் கல்வெட்டுக்கள் பெருகுகின்றன.

பராந்தகன் ஆட்சியின் நடுப்பகுதியில், வடக்கே நெல்லூர் வரை பரவியிருந்த சோழப் பேரரசு தக்கோலப் போரினால்

சு