பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

(225

தாக்குதலால் வலிகுன்றியிருந்த சோழர்களுக் கெதிராகக் கிளர்ந் தெழுந்து தன்னாட்சியைக் கைக்கொண்டான். அத்துடன் 953-ல் சோழருடன் அவன் சேவூரில் தொடுத்த போரில் வெற்றி பெற்றான். இதுவே முதற் சேவூர்ப் போராகும். இப்போரில் அவன் தான் ஒரு சோழனைக் கொன்றதாகவும், அச்சோழன் தலையையே போர்க்களத்தில் கால் பந்தாக வைத்து உருட்டி விளையாடியதாகவும் பெருமை கொண்டான். 'சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன்' என்ற விருதுப் பெயரும் சூட்டிக் கொண்டான்.

இங்கே சோழன் என்று பெயர் விவரமில்லாமல் கூறிய தனால் அது சோழ அரசனாகயிருக்க முடியாது. சோழர் குடி இளவரசருள் ஒருவராய் இருக்க வேண்டுமென்று வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். ஆனால், தம் மரபுக்கு இதனால் ஏற்பட்ட கறையை மாற்றச் சோழர் அவன் செயலை அவன் மீதே திருப்பினர் என்பது நோக்க, அந்நாளைய சோழர் இச்செயலைச் சிறு செயலாகக் கொள்ளவில்லை என்று தோற்றும். பாண்டியனால் உயிரிழந்த சோழன் அரிஞ்சயனே என்று சிலர் கூறுவர். முதற் சேவூர்ப் போர் 953-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாயின், அது முதற் பராந்தகனாகவே இருந்திருந்தலும் கூடும் என்னலாம்.

தொண்டை நாடும் பாண்டிய நாடும் இழந்த நிலையில் கண்டராதித்த சோழன் மீண்டும் விசயாலயன் கால சிற்றரசே எல்லையாகிய சோணாட்டை மட்டுமே ஆண்டிருக்க வேண்டும். ஆனால், இச்சோழன் பெருஞ் சிவ பக்தனானதால், இது பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஆட்சியெல்லை பரப்புவதை விட ஆண்டவன் பக்தி எல்லையைப் பரப்புவதிலேயே அவன் தன் வாழ்நாளைச் செலவிட்டான். அவன் அரசனாகவும், பக்தனாகவும் இருந்ததுபோலவே. அருங்கவிஞனாகவும் இருந்தான்.தேவார ஆசிரியர்கள் போலவே கோயில்கள் தோறும் சென்று அவன் திருப்பதியங்கள் பாடினான். ஆட்சியின் பிற்பகுதியில் அவன் மேற்குத் தமிழகமாகிய இன்றைய மலையாளக் கரை தென்கன்னட மாவட்டம், மைசூர் ஆகிய இடங்களில் திரிந்து சமயப்பணிகளாற்றி, மைசூரிலேயே இறுதி நாட்களைக் கழித்தான் என்று தோற்றுகிறது. அவன் பாடிய பதியங்கள் பலஇருக்கக் கூடுமானாலும் நமக்கு ஒன்றே