பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




226 ||

அப்பாத்துரையம் - 16

கிட்டியுள்ளது. பன்னிரு திருமுறைகளையும் தொகுத்த சைவ ஆன்றோரால் அது ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ளது. அதன் கடைசிப்பாட்டு அவன் இக்காலத் திருச்சிராப்பள்ளியாகிய உறந்தை அல்லது கோழி நகரையும், தஞ்சை நாட்டையும் ஆண்டவன் என்று குறிப்பிடுகிறது.

"சீரால்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்

காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த

ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ்மாலை”

சமயத்திருப்பணிபோலவே ஏரி, குளம் முதலிய நாட்டுத் திருப்பணிகளிலும் இவன் கருத்துச் செலுத்தியிருந்தான். கண்டராதித்தப் பேரேரி போன்ற பெயர்கள் இதற்குச் சான்று. இவன் அரசியருள் ஒருவர் மழவர்கோன் பாவையாகிய செம்பியன் மாதேவி. தன் கணவன் இறக்கும் சமயம் சிறுவனாக விட்டுச் சென்ற மதுராந்தகனைப் பேணுவதற்காக இப்பெருந்தேவி அவனுடன் இறவாது வாழ்ந்து, மூன்று ஆட்சிகள் வரை கணவன் வழிநின்று சமயத் திருப்பணிகளை நாடெங்கும் பரப்பி, இராசராசன் ஆட்சியில் 1001-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். சோழர் குலமே பெருமைப்படத்தக்க மூதன்னையாக அவர் வாழ்நாள் அமைந்தது.

வீரனான அரிஞ்சய சோழன் முன்னோரிழந்த தொண்டை நாட்டை மீட்பதற்காகப் பல போர்கள் ஆற்றினான். அவன் 'ஆற்றூர்த் துஞ்சிய பெருமாள்' என்று அழைக்கப்படுவதால், ஆற்றூரில் போர் புரிந்தே மாண்டிருந்தான் என்று கருத இட முண்டு.

அரிஞ்சயனுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் பராந்தகன் அல்லது சுந்தர சோழனும் (957 - 970) கண்டராதித்தன் மகனான மதுராந்தகன் அல்லது உத்தம சோழனும் (970 - 985) ஆண்டனர்.

சுந்தரசோழன் காலமுதல் சோழ மரபு புதுப் பேரரசுப் புகழ் வளர்த்தது போலவே, அவன் ஆட்சி முதல் தமிழ்மொழியும் புது