பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(228

அப்பாத்துரையம் - 16

நடைபெற்ற பாண்டியப் போரில் சிறிய வேளான் இடத்தில் அவன் மகன் பூதிவிக்கிரமசேரி படைத்தலைமை வகித்தான்.

இரண்டாம் சேவூர்ப் போரில் பாண்டியன் தோல்வியுற்று, சோழர் பெருவெற்றி பெற்றனர். பாண்டி நாடும் அவர்கள் கைப்பட்டது. இதன் பின் சோழன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் 'மதுரை கொண்ட இராசகேசரி வர்மன்' என்றும், 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்' என்றும் விருதுப் பெயர்கள் மேற்கொண்டான்.

சேவூர்ப் போரினால் வந்த பாண்டிய நாட்டு வெற்றி நிலையான வெற்றியாக இல்லை. ஏனெனில் 956, 966 -

அம் ஆண்டு களுக்குரிய வீரபாண்டியனுடைய 18, 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கள் காணப்படுகின்றன. ஓடிச் சென்றவன் மீண்டு வந்து ஆண்டா னென்று தெரிகிறது. இலங்கைப் படையெடுப்பின் பின் சோழர் மீண்டும் பாண்டி நாட்டைத் தாக்கினர். இப்போதுதான் வீர பாண்டியன் போரில் மாண்டான். முன் அவன் சோழர் மீண்டும் பாண்டி நாட்டைத் தாக்கினர். இப்போது அவன் தலையை வெட்டி, சோழர் விருதுப்பட்டம் பூண்டனர். வீ ரபாண்டியன்

முடித்தலைகொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று சோழ இளவரசன் ஆதித்தன் குறிக்கப்பட்டான். அவனுடனே படைத் தலைவராய் இருந்த கொடும்பாளூர்க் குறுநில மன்னன் பூதி விக்கிரமசேரியும்,பார்த்திவேந்திரனும் அதே பட்டத்தைத் தாமும்

மேற்கொண்டனர்.

பெருவீரனான ஆதித்தனுக்குச் சுந்தரசோழன் 966-ல் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான். ஆனால், எதிரிகள் சிலரால் அவன் 969-ல் கொலையுண்டான்.

இலங்கைப் படையெடுப்பு 965

பாண்டியனுக்கு இலங்கை அரசன் நான்காம் மயிந்தன் உதவி செய்ததனால், சுந்தரசோழன் அந்நாட்டின்மீது படையெடுத்த நேர்ந்தது. பாண்டி நாட்டுப் படையெடுப்பில் முதலில் படைத் தலைவர்களாயிருந்த ஆதித்தன். கொடும்