பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

229

பாளூர்த் தலைவன் பராந்தகன் சிறியவேளான், தொண்டை நாட்டுத் தலைவன் பார்த்திபேந்திரவர்மன் ஆகியவர்களே இங்கும் அனுப்பட்டிருந்தனர். ஆனால், சிங்களப்படைத் தலைவன் சேனா என்பவன் சோழர் படைகளை முறியடித்தான். சோழர் படைத்தலைவருள் ஒருவனான பராந்தகன் சிறியவேளான் போரில் உயிர் துறந்தான். கல்வெட்டுக்கள் அவனைக் ‘கொடும்பாளூர் வேளான் சிறிய வேளான்' என்று குறிக்கின்றன.

த்தோல்வியின் பின் சோழர் இலங்கை மன்னனோடு நேச உடன்படிக்கை செய்து கொண்டு மீண்டனர் என்று இலங்கை வரலாற்றேடான மகாவம்சோ கூறுகிறது.

தொண்டை நாடு மீட்பு 962

-

967

தொண்டை நாட்டை அடிப்படுத்திய இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் சார்பாக அந்நாட்டைஆண்டவன் வைடும்ப மரபினான விக்கிரமாதித்தனும் அவன் பின்னோருமே யாவர். விக்கிரமாதித்தனுக்குப் பின் திருவையன், சீர்கண்டன் என்பவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்சிப் பொறுப்பேற்றனர். பாணரும் தொடக்கத்தில் இராஷ்டிரகூடர் பக்கம் இருந்தாலும். சோழன் அரிஞ்சயன் தன் மகள் அரிஞ்சிகைப் பிராட்டியாரை பாணமன்னனுக்கு மணஞ்செய்து கொடுத்து அவன் நேசத்தைப் பெற்றிருந்தான். ஆயினும் அரிஞ்சயன் போர்கள் முழுதும் வெற்றியடையவில்லை.

சுந்தரசோழன் தந்தையைப் பற்றி வடக்கே அடிக்கடி போர்களில் ஈடுபட்டான். இதில் அவன் திடீர் வெற்றி எதுவும் பெறாவிட்டாலும், படிப்படியாகத் தொண்டை நாடு முழுவதும் அவன் கைப்பட்டன என்று தோற்றுகிறது. அவன் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு (962) முதல் அவன் கல்வெட்டுக்கள் தொண்டை நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. அதே சமயம் 967- வரை இராஷ்டிரர்கூடர் கல்வெட்டுக்களும் ஆங்காங்கு இடம் பெறுகின்றன.எனவே 962-லிருந்து 967 வரை தொண்டைநாட்டுப் போராட்டம் மெல்லச் சோழர் பக்கம் வெற்றியாக வளர்ந்தது என்று கூறலாம்.