பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13 காந்தளூர்ப் போர் 988

குரிய

233

சோழப் பெரும் பேரரசன் முதலாம் இராசராசன் ஆட்சிக் எண்ணற்ற பல வெற்றிகளிடையே அவன் காலக்கல்வெட்டுக்களால் பலபடப் புகழ்ந்து பேசப்படுவது காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய' என்பது அவன் செய லேயாகும். காந்தளூர்ச் சாலை என்பது தற்கால திருவாங்கூர்- கொச்சி கேரள அரசுக்குரிய மண்டலத்தின் தலைநகராகவுள்ள திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி. நகரின் பழம்பெரும் பகுதியும் அதுவேயாகும். அதன் நடுவீதி இன்று சாலை, பழஞ்சாலை அல்லது நெடுஞ்சாலை என்ற பெயருடன் நகரின் பெருங் கடைவீதியாகவும் வாணிகக் களமாகவும் இயங்குகின்றது. தமிழ் வணிகரும் தமிழரும் பேரளவில் இயங்குகின்றது. தமிழ் வணிகரும் தமிழரும் பேரளவில் வாழும் பகுதி அதனைச் சுற்றிலும் உள்ள இடங்களாகவே இன்றும் உள்ளன. சேர நாட்டுத் தமிழ்ப் புலவர் மிகுதியாக அணிமை வரை வாழ்ந்துள்ள கரமனை நகரம் அதன் கீழ்க்கோடியிலும், அவர்கள் பழம்பெரும் புரவலனான ஆய் மரபில் வந்த திருவாங்கூர் மன்னன் அரண்மனை மறுகோடியிலும் உள்ளன. இப் பழஞ்சாலையருகே புதிதாக அமைந்த சிறுசாலை

ரியச்சாலை என்று பெயர் பெற்றிருப்பதும், பழயசாலை இன்னும் தமிழ் ஒலிபடச் சாலை (Chalai) என்றும், புதிய ஆரியச் சாலை சமஸ்கிருத ஒலிபட ஆரியசாலை (Aryashala) என்றும் மலையாள மொழியில் எழுதப்படுவதும் குறிப்பிடத் தக்க செய்திகள் ஆகும். இவை ஆயிரம் ஆண்டுகடந்தும் மொழி காட்டும் வரலாற்றுப் பண்புகள் ஆகும்.

காந்தளூர்ச் சாலை அந்நாளில் சேர அல்லது கேரள மன்னரின் தலைசிறந்த துறைமுகமாகவும் வாணிகக் களமாகவும் மட்டுமன்றி, அவர்கள் கடற்படையின் மூலத்தளமாகவும் இருந்தது.கல்வெட்டுக்கள் அதற்குத் தரும் பெருஞ்சிறப்பின் உயிர் மறை இதுவே.

ஆட்சித் தொடக்கத்திலேயே இராசராசன் மேற்கொண்ட தென்திசைப் படையெடுப்புக் காந்தளூர்ச்சாலை நோக்கிய படையெடுப்பாகவே இருந்தது.

இப்படையெடுப்பின் காரணமாகக் கூறப்படும் செய்தியும் இராசராசனின் பேரரசுப் பண்பை முனைப்பாகச் சுட்டிக்