பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

237

காட்டியுள்ளார். இராசராசன் பேரரசுப் பண்பில் இது ஒரு கூறேயாகும். 'கடிதோச்சி மெல்ல எறிக' என்ற வள்ளுவனாரின் அரசியல் நுண்ணறிவுக்குரிய வாழ்க்கையிலக்கியத்துக்கு இது ஒரு நுனிமுகம் என்னலாம். இராசராசன் ஆட்சி முழுதும் காட்டும் பண்பு இதுவன்று என்பதையும் அவன் பிற செயல்கள் தெரிவிக்கும். அவன் இயற் பெயராகவே அமைந்த ‘அருண் மொழித்தேவன்' என்ற தொடரும் அதற்குச் சின்னமாகும்.

உதகை எரியூட்டப்பட்ட செயலை அகவற்பாவில் அமைந்த திருக்கோவலூர்க் கல்வெட்டு ஒன்று.

"சாரன்மலை எட்டும் சேரன் மலை நாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் தொடர் நெய்க்கனகம் துகள் எழ, நெடுநல் கோபுரம் கோவைகுலைய, மாபெரும் புரிசை வட்டம் பொடிபட, புரிசைச் சுதைகவின் படைத்த சூளிகை மாளிகை உதகைமுன் ஒள் எரி கொளுவி உதகை வேந்தைக் கடல்புக வெகுண்டு”

எனத் தீட்டிக் காட்டுகிறது.

விழிஞப்போர்

திருவனந்தபுரத்துக்குத்

தெற்கே 10கல்

விழிஞம் தொலைவில் மேல் கடல் கரையிலுள்ள ஒரு துறைமுக நகரம். இன்றும் அது அப்பெயருடனே சிற்றூராக உள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது சேர நாட்டின் தலை சிறந்த துறைமுகமாய் இருந்தது. காந்தளூர்ச்சாலை கலமறுத்த பின் சோழர் படையும் கடற்படையும் சேர்ந்து ஆற்றிய அருநிகழ்ச்சி இது ஆகும். இந்த நகரங்களின் சூறையாகவும் மன்னர் குடிமன்னர் திறையாகவும், சோழன் பெரும் பொன்மணி பொருட் குவைகளும், யானைகளும் சோணாட்டுக்குக் கொண்டு வந்து குவித்தான்.

சேர நாட்டு வெற்றியில் சோழர் படைத் தலைவனாயிருந்த வன் கம்பன் மணியன் என்ற விக்கிரம சிங்க மூவேந்த வேளான்.