பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

இரண்டாம் சேரப்படையெடுப்பு : கொல்ல வெற்றி: கொடுங்கோளூர் வெற்றி

239

பாண்டிய நாடு வென்று கொண்ட பின் இராசராசன் மீண்டும் சேரநாட்டுப் பக்கம் திரும்பினான். முதலில் வெல்லப் பட்ட சேரநாட்டு அரசன் அதன் தென்கோடி ஆண்ட திருவாங்கூர் அரசனே. வடபகுதியில் வேறும் பல சிற்றரசர் ஆட்சிகளாகப் பழய சேரநாட்டு மேல்கரைப் பகுதி அன்று அமைந்திருந்தது. அதில் ஒன்றே சோழன் அடுத்த வெற்றிக்குரிய கொல்லநாடு. அது தற்காலக் கொல்ல

தலைமையிடமாகக் கொண்டது.

நகரையே

சங்ககாலச் சேரர் தலைநகரான வஞ்சி இப்போது கொடுங் கோளூர் என்று வழங்குவதுபோலவே, சேரர் காலத்திலும் வழங்கிற்று. அதுவும் அன்றைய கொல்ல நாட்டுடன் சேர்ந்திருந்ததனால், கொல்ல வெற்றியுடன் வெற்றியாகச் சோழர் கொடுங்கோளூரையும் தமதாக்கினர்.

கொல்ல வெற்றிக்குப்பின் சோழன் தன்னைக் ‘கீர்த்தி பராக் கிரமன்' என்று அழைத்துக் கொண்டான்.

குடகு வெற்றி: பணசோகேப்போர்

தமிழகப் பேரரசர் தம் வெற்றி உலாக்களை வலமாக வளைந்து சென்று நடத்துவது தமிழக மரபு என்று கருதலாம். சங்கப் புலவராகிய கோவூர்கிழார் சோழன் கிள்ளி வளவனைப் பாடிய பாட்டில் இதனைக் குறித்துள்ளார். இராசராசன் வெற்றிகள் இம் மரபை நினைவூட்டுகின்றன.

கொல்லம், கொடும்பாளூர் வெற்றிகளுக்குப் பின் இராசராசன் வடக்கே சென்று குடகுமலை நாட்டை அணுகினான். இது சங்ககாலத்திலும் குடகுமலை நாடு என்றே அழைக்கப்பட்டது. இப்போது குடகு நாடு என்று வழங்குகிறது. இந்நாட்டவரும் அருகிலுள்ள தென்கன்னட மாவட்டத்தின் ஒரு பகுதியினரும் இன்று பேசும் மொழி துளு என்று கூறப்படும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்; துளு என்று ஐந்து தென்மொழி அல்லது திராவிட மொழிகளுள் அது ஒன்று. அது கன்னடத்திலிருந்து பிரிந்த ஒரு மொழியேயாகும். அதன் சிறு