பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240

|| - -

அப்பாத்துரையம் - 16

மொழியிலிருந்தும் சிறு பரப்புடைய மொழியாகக் குடகு மொழி பிரிந்து வருவதாக மொழி நூலார் பலர் கருதுகின்றனர். ஆனால், சங்ககாலத்திலிருந்து 12, 13-ம் நூற்றாண்டு வரை கூட இக்குடகு நாடு தமிழகத்தின் வடவெல்லை நாடாகவே குறிக்கப்பட்டுள்ளது.

பொன் விளையும் நாடு என்று சங்க காலத்திலும், காப்பிக் கொட்டை விளைவிக்கப்பட்ட நாடென்று 15-ஆம் நூற்றாண்டி லிருந்தும் பெயர் விளங்கிய நிலம் இது. வீரத்துக்கும் வீரசைவ சமயத்துக்கும் அது என்றும் ஒரு கோட்டையாகவும் மூலதளமாக வும் இருந்து வந்துள்ளது.

சங்க காலத்துக்குப் பின்னும் அந்நாட்டின் மிகப் பழங் கல்வெட்டுக்களும் மிகப் பழமை வாய்ந்த வரலாற்றுச் சான்று களும் பாண்டியர் சோழர்களின் தமிழ்க் கல்வெட்டுக்களே.

இராசராசன் காலத்தில் குடகுமலை நாட்டைக் கொங்காள் வார் என்ற அரச மரபினர் ஆண்டு வந்தனர். பணாசோகம் அல்லது பணசோகே என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இராசராசன் கொங்காள்வ மரபிலுள்ள அரசனை முறியடித்துத் துரத்தினான். நாடு அவன் கைப்பட்டது. ஆனால், தொலை விலுள்ள இந்த மலைநாட்டை நேரடியாக அவன் ஆள விரும்பவில்லை. போரில் சோழருக்குப் பேருதவியாயிருந்த ‘மனிஜன்' என்ற வீரனுக்கு அவன் 'க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான்' என்ற பட்டம் தந்து 'மாளவ்வி' என்ற ஊரையும் அவனுக்கு அளித்திருந்தான். திரும்பும் சமயம் நாட்டின் ஆட்சியையும் தன் கீழ்ச் சிற்றரசனாக இருந்து ஆளும்படி அவனிடமே விட்டுவிட்டான். அவன் மரபினரே அங்கே நெடு நாள் ஆண்டனர்.

கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி வெற்றிகள்; 991

குடகுவெற்றியிலிருந்தே சோழர் பெரும்படைத் தலைவனாக, இராசராசன் மூத்த புதல்வனான முதலாம் இராசேந்திரன் அமர்த்தப்பட்டிருந்தான். தற்கால மைசூர்த் தனியரசுடன் அதனையடுத்த சேலம் மாவட்ட எல்லையையும் பெல்லாரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி ஆகியவற்றை -மலையம் கொண்கானம், துளவம் ஆகிய பகுதிகளை -மும்முடிச் சோழன் பெற்ற வெற்றிக்களிறு